Entry: காம கோடியா ? காமக் கேடியா? Tuesday, June 22, 2004ரொம்ப நாளா தோழியர் பதிவுகளை பார்க்கவில்லையே என்று சென்றிருந்தேன். அங்கு நடந்த உரையாடலின் விளைவு இந்தப் பதிவு.

http://www.kamakoti.org/tamil/pen2.htm

>>பணிவிடை செவ்தில் வேலைக்காரியாகவும்,
>>ஆலோசனை கூறுவதில் அமைச்சராகவும், அழகில்
>>லக்ஷ்மியாகவும், பொறுமையில் பூமாதேவியாகவும்,
>>பள்ளியரையில் வேசியாகவும், விளங்குபவளே குலப்
>>பெண்ணாவாள். இப்படி உலகில் குடும்பப் பெண்
>>கணவனோடு இரு சரீரங்களுடன் ஒரு மனத்துடன்
>>வாழ வேண்டும்.


இந்த பக்கத்தைப் படித்தவுடன் நினைத்ததை அப்படியே
எழுதியிருந்தேன் எனில் யாரும் படிக்க முடியாது.
தூத்தேறி! ஒரு ஞான பீடத்தின் லக்ஷ்ணம்இதைவிட கேவலமாக இருக்க முடியாது. அசிங்கமா வருது வாயில தே... (அட கெட்ட வார்த்தைங்க)அதே லாஜிக்கில் இங்கு பீடத்தில் தலைவராய் இருப்பவரின் தாயாரும் கூட அவரது த ந்தைக்கு வேசி போலவே இருந்தார் என்று மனம் கூசாமல் எல்லோரும் சொல்வார்களா? அதை ஏற்றுக் கொள்வார்களா? அப்படி வேசி போல் இரு ந்தவரை வேசி என்று வரது தந்தை அழைத்தால் சரி என்று சொல்வார்களா? வெட்கங் கெட்ட ஜென்மங்கள். இப்படி அறிவற்ற ஒரு கருத்தை எப்படி கூச்சமில்லாமல் அறிவுரை என்று சொல்ல முசிகிறது.

>>இந்த உலகம் எப்பொழுதும், யாரால் படைக்கப் பட்டதென்று இன்னும்
>> நிர்ணியக்கப்படவில்லை. ஆகவே அநாதி காலந்தொட்டு உலகம் இருந்து >>**வருவதாகச் சொல்கிறார்கள்.**

இது போன்ற அறிவான சமாச்சாரங்களில் ஆழப் பேசுகிறார்களா பாருங்கள். அதெல்லாம் பேசத்தெரியாது. விளக்கிச் சொல்லத்தெரியாது. வெட்டி அறிவுரைக்கு ஒன்னும் குறைச்சல் இருக்காது.  இ ந்த மாதிரி விஷயங்களில் மட்டும்  "சொல்கிறார்கள்" , "அந்த மந்திரம் சொல்லுது" , "இந்த மூத்திரம் சொல்லுது " என்று மூடி மறைத்துவிட்டு, பெண்களை மட்டம் தட்டும் கருத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஆண் கும்பல் பேசி பெருமை அடைந்து கொள்கிறது.

ஏன்? இந்த மந்திரம் இப்படி சொல்லியுள்ளது , ஆனால் இது இ ந்த காலத்துக்கு பொருந்துவதாக இல்லை என்று நிராகரித்திருக்கலாமே. அல்லது
குறைந்தது *அப்படி சொல்லியிருக்கிறார்கள்*, எனக்கு சரியாக விளங்கவில்லை என்றாவது சொல்லலாமே? இந்த கருத்து நமது மானமிழந்த சமூகத்தில் எளிதில்
விற்பனையாகும் சரக்கு எனவேதான் "அறிவுரை" என்ற பேரில் விற்கிறார்கள்.

>>உண்மையான குடும்பப் பெண்ணானவள் தன்னுடைய பதியின் மீது எந்தவித
>>உவச்சொல் ஏற்பட்டாலும், அதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாது
>>என்பதுதான் கலை. குடும்பப் பெண் கணவனிடம் எப்படியிருக்க
>>வேண்டுமென்று நீதி நூல் கூறுகிறது.

அட நாசமா போனவனுங்களே! ஏண்டா இப்படி எழவெடுக்கிறீங்க?
காம கோடி பீடத்தை பின்பற்றுபவர்கள் , குடும்பஸ்தர்கள் இ ந்த நீதியை
பின்பற்றுவார்களா? பின்பற்றத்தான் முடியுமா? அட இப்போதைய பெண்களை விட்டு விடுங்கள். அ ந்தகாலத்துப் பெண்கள் கூட இதைப் பின்பற்ற முடியுமா?
  இ ந்த எழவெடுத்த நீதி சொல்வது போல் நடக்கலாம் என்றால், எல்லா பதிகளும் திருடனாய் கொலைகாரனாய் கூட இருக்கலாமா? யார் என்ன சொன்னாலும் அதை பத்னி கேட்டுப் பொருட்படுத்தக்கூடாதா? போலிஸ் பிடித்துக் கொண்டு போனால் கூடவா? மனைவியை வேசிபோல் என்று நினைப்பவன் வேறு என்ன சொல்லப்போகிறான். அட அநியாயக்காரர்களே! உங்கள் அகராதிப்படி வேசி என்பவள் யார் ? பத்தினி என்பவள் யார்?

>>இதை வைத்துத்தான் நமது வீடுகளிலே திருமணம் நடக்கும்போது, "கௌரீ
>>கல்யாணம் வைபோகமே, சீதா கல்யாணம் வைபோகமே" என்று
>>பாடுவார்கள்.

ஏன்? நீங்கள், "வேசியாய் இருக்கப் போகிறவள் கல்யாணமே" என்று கூட மந்திரம் சொல்லலாமே? சொல்வீர்களா?

>>அப்படிப்பட்ட பரம்பொருளை அடைவதற்கும், உலகில் நடப்பைச்
>>சொல்வதற்கும், உருவ வழிபாட்டையும் அநாதி காலந்தொட்டு ஹிந்து சமம்
>>ஏற்றுக் கொண்டுள்ளது.

அடக் கொடும் பாதகா, இப்படி ஒரு அப்பட்டமான பொய்யா?
" நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் "
என்ற திருமூலரின் பாட்டுக்கு என்ன அர்த்தம் சொல்வீர்கள்?
திருமூலர் சைவரே கிடையாது என்று சொல்லப் போகிறீர்களா?

 இந்த மாதிரி ஜென்மங்களின் கையில் இந்து மதம் சிக்கியது கூட பரவாயில்லை. இவர்களை நம்பி யாரும் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வார்களே என்றுதான் புலம்ப வேண்டியுள்ளது.

   3 comments

karthikramas
June 26, 2004   01:57 AM PDT
 
Selvaraj anne,
I think I need surrender at Pari anne again, to correct my utf-8 problem. But I will try myself first.

Thanks for informing about soda bottle avarkaLin pathivu. I hope you read my 2 nd pathivu about kamakoodi.
Karthikramas
June 24, 2004   08:44 PM PDT
 
செல்வா,
உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த பதிவுக்கு எப்படி நம்ம மக்களிடம் ரியாக்ஷன் இருக்கும் என எஅன்க்கு மிகச் சரியாகத் தெரியும். என் மீதுதான் கோபப் படுவார்கள். அதுதான் நடைமுறை. :)
செல்வராஜ்
June 23, 2004   07:37 AM PDT
 
கார்த்திக், வேசி விஷயத்தை விடுங்க, ரசனைக்குறைவான உவமை என்றாலும் என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறது. (ஆனாலும், அது ஆண்களுக்கும் சொல்லப் படவில்லை என்பது கேள்விக்குரியது தான்). கணவன் மீது உவச்சொல் என்றால் காது கொடுத்துக் கேட்கக் கூடாது என்பது நீங்கள் சொன்னபடி "சரியான எழவெடுத்த நீதி" தான் :-). பொதுவாகவே பெண்ணானவள் எப்படி இருக்க வேண்டும் என்று வரைமுறை வகுப்பது அடிமட்ட ஆணாதிக்கக் கருத்துத் தான். இவையெல்லாம் தான் இந்து மதம் என்றால் அப்படியொன்றும் பெருமைக்குரியதாய் இல்லை !

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments