Entry: இடைவெளி விடுமின் இன்புற்று வாழ்மின்... Monday, June 21, 2004இடைவெளி விடுமின் இடைவெளி விடுமின்
  இது அமெரிக்காவில் பிளசர் கார்(இன்ப ஊர்தி?) ஓட்டுபவர்களுக்கு  தலையில் ஒரு குட்டு வைக்கும், அறிவுரை வழங்கும் முயற்சி.

  ஐ- 495 ல் வந்து கொண்டிருந்தேன். வழக்கமாய் எடுக்கும் வெளிப்பாதையை(எக்ஸிட்) விடுத்து 2 வெளிப்பாதை தாண்டி எடுக்கலாம் என்று உள்ளே இருக்கும் (மனக்) குரங்கு சொன்னது. ஏன்னு கேட்டேன், லோக்கல் சந்து பொந்துகளில் ஓட்டுவதை விட 495-ல் ஓட்டினால் வேகமாய் வீடுபோய்ச்சேரலாம். மேலும் 65 மைல் வேகத்தில் போகலாம் என்று கொஞ்சம் தங்கிலிஷ் கலந்த பாசையில் சொல்லியது. சரி இது பேச்சை கேட்டுத் தொலைப்போம் என்று வந்து கொண்டிருந்தேன்.

  ஐ- 495ன் எதிர்ப்புறம் எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. அதாவது காலியாய் இருந்தது மொத்த ஒருபக்க ஐ- 495 ம். இது போல் சுத்தமாக நிறுத்தப்பட்டு நான் ஒரே முறை முன்பொரு சமயம் பார்த்துண்டு. ஆனால் காலைவேளைகளில் ஜனநெருக்கத்தினால் ஐ- 495 சாதாரணமாகவே நிறுத்தப்பட்டது போல்தான் 5 அல்லது 10 மைல் வேகத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். என்னடா இது நம்ம வரோம்னு யாராவது காவல் துறைக்கு செய்தி அனுப்பிட்டாங்களா? அப்ப கூட நமக்கே வழி விட மாட்டீகிறானுங்களே! - இது உள்ளே இருக்கும் குரங்கு. குரங்கின் பேச்சைக் கேட்காமல் எதிர்ப்பாதையில் என்ன நடந்தது என்று நோட்டம் விட்டேன். மூன்று கார்கள். மூன்றாவது கார் வலப்புற பதையின் தோள்ப்பகுதியிலுள்ள (ஷோல்டர்?) த்டுப்புக் கம்பியின் மீது மோதி தலை உடைந்து கிடந்தது. காரின் இருந்தவனுக்கு/இருந்தவளுக்கு  நிச்சயமாய் தலைச்சேதம் உண்டாகியிருக்கும் என்று தெரிந்தது.
  அருகில் கம்பீரமாய் ஸ்டேட் ட்ரூப்பர் (மாநில காவல்ப்படை அதிகாரி)  எதிர்ப்புற சாலையில் அதி வேகத்தில் முதலுதவிக்காய் சென்று கொண்டிருந்தார். 1 நிமிடத்துக்குள்ளாகவே ஒரு ஆம்புலன்ஸ் (மருத்துவ உதவு வண்டி) வந்து கொண்டிருந்தது.
 
  அமெரிக்காவில் 90 மைல் வேகத்தில் சென்றால் கூட சில சமயங்களில் நாம் வேகமாய் செல்வது போல் தோன்றாது. எனது சிவில் பொறியியல் படிப்பில் ட்ராபிக் பொறியியல் என்ற பாடமுண்டு.
அதில் முக்கியமாய் ஒரு விதியை வலியுறுத்துவார்கள். அது ஒவ்வொரு 10 கி.மீ வேகத்துக்கும் ஒரு கார் நிறுத்த இடைவெளி அவசியம் என்பது. இதௌ ஆங்கிலத்தில் ப்ரேக்கிங் டிஸ்டன்ஸ் என்று சொல்வார்கள். அமெரிக்காவில் இந்த இடைவெளியை பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை. காரணம் மிகவும் பழக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு இது அவசியமில்லை என்று தோன்றலாம். அல்லது வேகமாய் போய் சாதிக்க வேண்டிய கலெக்டர் வேலை இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இடைவெளியைக் குறைத்தல் ஒரு மிகவும் அறிவீனமான செயல். (கொஞ்சம் உறைக்கட்டுமே என்றுதான் இந்த பதப் பிரயோகம் :)) அறிவியலுக்கு மாற்றமான செயல்.

பிரேக் பிடிக்க நினைக்க ஆரம்பித்து  நமது கால் பிரேக்கை பிடிக்கச் செலவாகும் நேரம் குறைந்த பட்சம் 2 விநாடிகள் என்று கணக்கிட்டுள்ளனர். அப்போது வண்டி செல்வதற்குத் தேவையான தூரம்தான் ப்ரேக்கிங் டிஸ்டன்ஸ் அல்லது நிறுத்து தூரம்.

அப்படியெனில் நமக்கு முன்னால் எல்லாவனும் கட் பண்ணிப் போவானுங்களே என்று அழுவாதீர்கள். அது ரொம்ப சாதாரண பிரச்சினை பாபுகாரு. :)

எனவே,
 இடைவெளி விடுமின் இடைவெளி விடுமின்
 இடைவெளி விடுமின் இன்புற்று வாழ்மின்.

(தொடரலாம்...)

   5 comments

karthikramas
June 22, 2004   01:23 PM PDT
 
ரவி நீங்க சொன்னது எனக்கும் தோணுச்சு. பதிவுல ஒரு திருப்பு முனை இருக்கட்டுமேன்னுதான். :)
நியூ பாஷன், தலைப்புக்கும் போஸ்ட்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கக்கூடாதுன்னு ஒன்னு முயற்சி பண்றேன். :)
ravi srinivas
June 22, 2004   12:51 PM PDT
 
intha thalaiipu veru ethayoo niniaiyupaduthu kirathe :)
ravi srinivas
June 22, 2004   09:24 AM PDT
 
முக்கியமாக கவனிக்க வேண்டியது ப்ரேக் பிடிப்பது போல் நடிக்க வேண்டும். இடிக்கக் கூடாது :)
easier said than done :)
Karthikramas
June 21, 2004   11:23 PM PDT
 
அதுக்கும் கைவசம் ஐடியா இருக்கு. சட்டென ப்ரேக் பிடிப்பது போல பாவ்லா காட்டினீர்கள் எனில்,
இன்சூரன்ஸ் ஏறப்போகிற பயத்தில் பக்கத்து லேனுக்கு போய்விடுவான். முக்கியமாக கவனிக்க வேண்டியது ப்ரேக் பிடிப்பது போல் நடிக்க வேண்டும். இடிக்கக் கூடாது :)
Boston Bala
June 21, 2004   04:51 PM PDT
 
நான் போதிய இடைவெளி விட்டு வண்டி ஓட்டினாலும், என் பின்னால் வருபவன், டெயில்கேட் செய்தால், என்ன செய்வது!?

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments