Entry: மூக்கனின் பிரசவ வலி பதிவு குறித்தும், அதை Wednesday, July 28, 2004மூக்கனின் பிரசவ வலி பதிவு குறித்தும், அதைத்தொடர்ந்து குசும்பனின் பதிவு குறித்தும் இன்று பாலாஜியும் நானும்் யாகூவில் சில  கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம்.

1, முதலில், குசும்பன் ஜெயஸ்ரீ எழுதியது குறித்து  அதிருப்தி தெரிவித்துள்ளார். இது அவரது ஆணாதிக்க மனம் அவருக்கு தெரியாமல் வெளிப்பட்டதாக இருக்க வாய்ப்பு இருக்கலாம். இதே 'அரிப்பு' என்ற வார்த்தையை இன்னொரு ஆண் வலைப்பதிவு நண்பர் எழுதியிருந்தால் என்ன யோசித்திருப்பார் என்பதும் சிந்தனைக்குரியது. ஆண்கள் எதை வேண்டுமெனில் பேசலாம் , எழுதலாம் , ஆனால் பெண்கள் இதை எழுதினால் அசிங்கம்,வக்கிரம் என்று (குசும்பன் அப்படி சொல்லவில்லை) நிலவும் தமிழ் சமூகக் கருத்து எனக்கு ஏற்புடையதில்லை. இதற்கு எந்த கலாச்சாரக் கூறை மேற்கோள் காட்டினாலும் , அந்த கலாச்சாரத்தை நான் எட்டி உதைப்பேன். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்னைப்பொறுத்தவரை. தாம்பத்யத்தை  போற்றுதலுக்குரியது என்று  உண்மையில் நினைப்பவர்கள் பெண்ணையும் அதே போற்றுதலுக்குரியது என்று ஏன் நினைப்பதில்லை என்பது ஆச்சரியத்துகுரிய ஆனால் சிந்தனைக்குரிய கேள்வி.

2. பிரசவ வலி குறித்து என் கருத்து என்ன என்று கேட்டு பாலாஜி கொஞ்சம் சதாய்ச்சார். நான் யோசிக்க வேண்டிய விஷயம் என்றேன். என்ன 'எஸ்கேப்பிஸமா?" என்று மீண்டும் கலாய்த்தார்.
அவருடைய கேளிவியைத் தொடர்ந்து நான் தந்த பதிலகளை கீழே தமிழில் தருகிறேன்.
  1. பிரசவத்தை ஒரு ஆண் பார்க்க சம்ம்திக்கவில்லை என்றால் அவன் தன் மனைவியை காதலிக்கவில்லை என்று அர்த்தமல்ல.

  2. பாலாஜி, அமெரிக்கர்கள் செய்ய முடியும்போது நாமும் செய்ய வேண்டும். நம்மாலும் முடியவேண்டும் என்றார். ஆண்களால் இருக்க முடியாதது , அதைப் பற்றி புரிந்து கொள்ள இயலாமைக்கு வழி கோலும் என்றார்.

  3. நான்., இது நீங்கள் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையின் பழக்கத்தினைப் பொறுத்தது என்றேன்.
இது ஒரு பாடம் படித்தல் போன்றது. அவசியம் கற்க வேண்டிய பாடம். ஆனால் முதல் முறையே அப்படி பிரசவத்தைப் பார்த்து கற்றுக் கொள்வதற்கு போதிய மனோபலம் தேவை. மிகவும் கடினமான பாடம் அந்தவகையில் என்றேன்.

  4. பாலாஜியோ, நீங்கள்(பொதுவாக ஆண்களை) ஒரு ஆணாக இருப்பதால், அதை  சாக்காக பயன் படுத்திக் கொண்டு தப்பிக்கிறீர்கள் என்றார். மூக்கன் எழுதியது அவரது நேர்மையை காட்டுவது என்றார். மேலும் இது ஆண்கள் தவிர்க்க வேண்டிய விஷயமல்ல, மிக வெளிப்படையான விஷயம்.

 5.  ஆனால் பெரும்பாலான ஆண்கள் செய்வதில்லை என்று சொன்ன பாலாஜியை, நான் 'ஏன் செய்வதில்லை?' என்று கேள்வி கேட்டேன்.

 6. தொடர்ந்து நானே,  ஆண்கள் செய்ய ஆசைப்படாதற்கு காரணம் அல்லது தவிர்ப்பதற்கு காரணம் , ஆண்கள் பிரசவ காட்ச்சியினைப் பற்றி ஒரு முன்கருத்து வைத்திருப்பார்கள். அல்லது சின்ன வயதில் பிரசவத்தை பார்க்க விடாமல் பெரியவர்கள் தடுத்து அப்படியே மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்தக் காட்சி மிகவும் கோரமானதாக இருக்கும் என்றும் அவர்களால் அதைப் பார்த்து தாங்கிக் கொள்ளமுடியாது என்றும்  நினைத்திருப்பர்.

 7. என்னால் ஒரு பிரசவத்தைப் பார்க்க முடியும். ஆனால் நான் எல்லா ஆண்களையும் அப்படி எதிர்பார்ப்பது முறையல்ல.

 8. இதை சரியாக சொல்லிக் கொடுக்காத நமது சமூகத்தைதான் நான் குற்றம் சொல்வேன்.
ஆணையும் பெண்ணையும் பிரித்து வளர்த்தே பழக்கிய நம் சமூகமே இதற்கு காரணம். இது மாதவிடாய் காலத்திலிருந்து தொடங்குகிறது. பெண்ணின் பிரச்சினையில் ஆண் ஒதுங்கி இருக்கவேப்பழக்கப்படுத்தப் படுகிறான். பின் தீடிரென் ஒரு நாள் பிரசவத்தைப் பார், ரத்தத்தைப் பார் என்றால் அவன் என்ன செய்ய முடியும்?
(இந்த இடத்தில் பாலாஜி என்னைப் பாராட்டினார், அது இப்போ அவசியமில்லை :)))

9. ஆனால் ஆண் வேண்டாம் எனத் தவிர்ப்பது ஒரு எஸ்கேப்பிஸமே. அதற்கு போதிய மனோ தைரியம் இல்லாததைக் காரணமாகச் சொல்லலாம்.

இப்படி நடந்த எங்கள் பேச்சு, இந்திய சமூக திருமணத்தைப் பற்றித் திருப்பியது. பாலுறவு பிரச்சினைகள் பார்க்கப்படும் விதம் குறித்தும் ஓரிரு கருத்துக்களைப் பரி மாறிக் கொண்டோம். அதை அடுத்த பதிவில் தருகிறேன்.

கொசுறு : :)

Avoid hospitals that do not allow husbands into the labor and delivery rooms. It's your husband's baby too, and he belongs with you. Arm yourself for arguments on this point by reading Robert M. Bradley's book, HUSBAND-COACHED CHILDBIRTH.

   4 comments

Name
August 3, 2004   03:00 PM PDT
 
athu shreya ezuthinathu! not jeyasri. not rsl.
Name
July 29, 2004   10:20 AM PDT
 
நன்றி பரிமாறி :)
நன்றி பரிமாறி :)
ஆணுறை பற்றி: அந்தக் காலத்து மனுஷங்க கிறேஸி பீப்பிள் இல்ல!! :) ஆனாலும் பாவம் :-(

பாலா,
நான் ஆண்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் காரணம் இதுதான் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதே! நன்றி. இதற்கு ட்ரைவிங் ஸ்கூல் போவது போல ஒரு நடைமுறைப் பயிற்சியும், பயிற்சி நிலையங்கள் சமூகத்தில் வரவேண்டும். அப்போதுதான் இது எல்லா ஆண்களுக்கும் சாத்தியமாகும்.


பாலா, நான் ஆண்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் காரணம் இதுதான் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதே! நன்றி. இதற்கு ட்ரைவிங் ஸ்கூல் போவது போல ஒரு நடைமுறைப் பயிற்சியும், பயிற்சி நிலையங்கள் சமூகத்தில் வரவேண்டும். அப்போதுதான் இது எல்லா ஆண்களுக்கும் சாத்தியமாகும்.
sodabottle
July 29, 2004   09:00 AM PDT
 
//பின் தீடிரென் ஒரு நாள் பிரசவத்தைப் பார், ரத்தத்தைப் பார் என்றால் அவன் என்ன செய்ய முடியும்?//

இன்று திடீரென்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் ஆரம்பித்து தானே ஆக வேண்டும்.? பழக்கமில்லை, சமூகம் என்னை அப்படி வளர்க்க வில்லை, என் வளர்ப்பு குடும்ப சூழல் அதற்கு என்னை தயார் செய்ய வில்லை போன்ற வாதங்கள் இந்த விஷயத்துக்கு மட்டும் இல்லையே.

நாம் (ஆண்கள்) ரொம்ப நாளா, பெண் கல்வி கற்பது, பெண் வேலைக்கு போவது, பெண் கணவனை தானே தேடிக் கொள்வது, பெண் சுதந்திரமாய் இருப்பது போன்ற mould breaking /non confirming விஷயங்களுக்கு பல காலமாக பயன் படுத்தி வந்திருக்கிறோம். எனவே, "we are not ready" வாதம் சரியாகது என்று நினைக்கிறேன்.
Pari
July 28, 2004   11:28 PM PDT
 
முதலில், குசும்பன் ஜெயஸ்ரீ எழுதியது குறித்து
>>
முதலில் அது rsl(சுப்புலக்ஷ்மி?); ஜெயஸ்ரீ அல்ல.

கருத்துக்களைப் 'பரி மாறி'க் கொண்டோம்.
>>
பரிமாறி - ஒரே வார்த்தை. பிரிச்சிப் போட்டு நடுவுல என்னையும் உருட்டாதீங்க :-)

வெங்கட் ஒரு சூப்பர் மேட்டர் போட்ருக்காரே பாத்தீங்களா? :-)

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments