Entry: என் குடும்ப போட்டா.. :p Thursday, June 24, 2004வாசன் வலைப்பூவில், ஒரு நாய் குடும்பத்தைப் பற்றிஎழுதி, போட்டா போட்டதும் எனக்கும் என் குடும்ப போட்டா (?) போட ஆசை வந்துவிட்டது.என்ன்னுடைய படங்களையும் என் குடும்ப படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
angrylion

1.இது நான் போட்டா ஸ்டுயோவில் அழகாக போஸ் கொடுத்து எடுத்தது. படத்திலிருப்பது நான் தான். ஆறறிவுள்ள (அ)சிங்கம். இன் இங்கிலீஷ், சிக்ஸ்த் சென்ஸ்டு சிங்கம். :)
baduy

2. இது ஹாலோவீன் பண்டிகையின் போது அணிந்தது. பட்டப் பெயர் சங்கிலிக் கருப்பன்.
childhood
3.இது நான் 2 வயதில் இருக்கும் போது எடுத்த படம். அப்போது எனக்கு 2 பற்கள்தான் இருந்தது. ஹொவ் கியூட் :)
dady shouts

4. இது என் மதிப்புக்குரிய தந்தை. ஒரு முறை காலேஜ் கட் செய்துவிட்டு சினிமா பாக்கப் போனபோது திட்டினார். அப்போது எடுத்தது. அவருக்குத் தெரியாது.
drawing

5.இது என் அக்காப் பையன் ஸ்கூல் ஒவியப் போட்டிக்கு வரைந்தது. மனிதனை வரைந்த இன்னொரு குழந்தைக்கு போனது ம்தற்ப் பறிசு :-(. இவனுக்கு 2 ம் பரிசு.

Family
6.இது நானும் என் அப்பாவும் தஞ்சாவூர் போயிருந்தபோது எடுத்தது.

family3

7.இது அப்பா ,பெரியப்பா மற்றும் நான். போர்ட்ரைட் செய்தது. வீட்டு ஹாலில் மாட்டியிருப்பது.
family3.realjpg

8.இது அப்பா, அம்மா மற்றும் நான். ஒரு ஞாயிற்றுக் கிழமை அருகில் இருக்கும் பார்க் போனபோது எடுத்தது.
father_works

9.அப்பா வேலையிடத்தில் எடுத்தது. இரைக்காக கால் கடுக்க காத்திருக்கிறார். பாவம்.
grandpa

10.இது எங்கள் ஊரை ஆண்ட இன்கிலாந்தையர்களில் ஒருவர். அவரது இந்த சிலை இருக்கும் இடம் இங்கிலாந்து.
malaivaazLion

11. எங்கள் சமூகத்தில் சிலர் மலைவாழ் பழங்குடிகள். ஆனால் அவர்களுக்கும், பாரம்பரிய கலாச்சாரம் உண்டு. 'மலை வாழ்'னு சொன்னா கோபம் வரும். :)

marapuooviam

12.இது பழங்கால மரபு ஓவியம். A sage.
modernart

13.இது இக்காலத்திய மாடர்ன் ஆர்ட். ஒரு நடிகை. என்னே அழகு!.
portrait

14. இது நான் தான் 2 வருடங்களுக்கு முன் நியூ யார்க் செல்லும் போது ரோட்டு ஓரத்தில் போர்ட்ரைட் செய்த படம். ஸ்கான் பண்ணிப் போட்டிருக்கேன்.
sciencedevlopment

15.இது எங்கள் சமூகத்து விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் படம். எக்ஸ்-கேட்-007 மாடல். அதி நவீனமானது. இப்போது இதை பறக்க வைக்க முற்சி செய்து கொண்டுள்ளார்கள்.

toylion
16. இது அம்மா எனக்கு வங்கித் தந்த பார்பீ டால். பழசானதில் கொஞசம் டல் ஆயிட்டுது. என்ன? என்னுடைய படங்களில் நான் எப்படி இருக்கிறேன்.? அதி ஸ்மார்ட்தானே? :)

   12 comments

Kasi
June 30, 2004   03:52 PM PDT
 
//..அவரு நல்லா பொண்ணூகளைப் பார்த்துவிட்டு வந்தேன் என்றுதான் சொல்வார். :)..//

அதைகூட ஒழுங்கா செய்ய விட்டாங்களா? அதுதான் சொன்னேன் பயணம் 75% தான் திருப்தி என்று :))

sundaravadivel
June 29, 2004   05:53 PM PDT
 
சே, ஒன்று மறந்து போனது, எனக்கு ரொம்பப் பிடிச்சது 6வது. சிரிச்சேன் :)
sundaravadivel
June 29, 2004   05:23 PM PDT
 
காசியண்ணாகிட்ட சொல்லிவிட்டது, சல்சா எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தா இந்தப் படங்களை யாருக்காகவோ போட்ட மாதிரி இருக்கே:)
karthikramas
June 29, 2004   02:25 PM PDT
 
மதி,
அவரை நம்பினேன் எனில் நான் தொலஞ்சேன். அவரு நல்லா பொண்ணூகளைப் பார்த்துவிட்டு வந்தேன் என்றுதான் சொல்வார். :)

விங்ட் மைக்ரேஷன் பார்த்துட்டு திட்டுறதுனா, தனி மடலில் திட்டவும்.

மதி,
அவரை நம்பினேன் எனில் நான் தொலஞ்சேன். அவரு நல்லா பொண்ணூகளைப் பார்த்துவிட்டு வந்தேன் என்றுதான் சொல்வார். :)

விங்ட் மைக்ரேஷன் பார்த்துட்டு திட்டுறதுனா, தனி மடலில் திட்டவும்.

ரோசா, எனக்குஇப்படி ஒரு பெர்சனாலிட்டி(நகைச்சுவை) இருப்பதை ஏற்கமுடிகிறதா உங்களால்? :))
Mathy Kandasamy
June 28, 2004   04:12 PM PDT
 
adadae... piramaatham. garjanaiyOdu vaaza vaazthuhaL. kOvai pOy irunthavar thirumbittaar. Ethaavathu nalla seythi kondu vanthirukkiRaaraa? :)


FYI: neenga sonna, winged migration enga library'la vanthgirukkunnu sonnaanga. pEr'ai waiting listla kuduthu irukkaen. paarthuttu solluren.
rosavasanth
June 28, 2004   04:49 AM PDT
 
Intersting to read!
karthikramas
June 26, 2004   01:09 AM PDT
 
I am unlucky enough to try for the process, once the process is started then 'God'speed , I guess ;)
ravi srinivas
June 25, 2004   10:37 AM PDT
 
are you trying for the next generation or to start the process for next generation :)
Karthikramas
June 24, 2004   08:41 PM PDT
 
நன்றி நண்பர்களே,
இது மாதிரிதான் நட்டு லூஸாகும்போது எதாவது செய்துகொண்டிருப்பேன். லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ரவி, அதுக்குத்தான் முயற்சி பலமா நடக்குது.

ஈ.நா, இப்படி எல்லாம் பாராட்டி என்னை அடிக்கடி கர்ச்சிக்க அல்லது யாரையாவது அர்ச்சிக்க வைக்காதீங்க. நானொரு குழந்தைங்க. 2 பல்லுதான் இன்னமும் :)

சங்கர் அதே அதே :)
shankar
June 24, 2004   02:27 PM PDT
 
aa! singamaa irukee! :-)
ravi srinivas
June 24, 2004   10:59 AM PDT
 
how about the next generation :)
Eelanathan
June 24, 2004   08:49 AM PDT
 
காட்டுராஜாவே வணக்கம்(தமிழ்ச் சிங்கம் தானே)கலைஞர் மாதிரி கர்ச்சித்துக்கொண்டு எந்தையும் தாயும் குந்தியிருந்து மான்கறியும் மரைக்கறியும் சுவைத்துண்ட மாநிலத்தே முந்தி என் முன்னே வந்து நின்று யாரைக்கேட்கிறாய் தமிழ்ச்சிங்கமா என்று என் தாத்தாச் சிங்கம் தமிழ் என் அப்பாச்சிங்கம் தமிழ் நான் தமிழ் என் பேரன் தமிழ்.........!

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments