<< April 2017 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01
02 03 04 05 06 07 08
09 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30


If you want to be updated on this weblog Enter your email here:


rss feed

Tuesday, July 06, 2004
சத்ய சாய் பாபா பற்றிய செய்தி ஒலிப்பதிவு...

1. சத்ய சாய் பாபா பற்றிய செய்தி ஒலிப்பதிவு மற்றும் கட்டுரை.
===========================================================
  சில நாட்கள் முன் நண்பர் பாஸ்டன் பாலாஜி, சாயி பாபா பற்றி பேச்சு எழுகையில் எனது கருத்துகளை கேட்டிருந்தார். இந்த பதிவுக்கும் அதற்கும் எவ்விததொடர்பும் இல்லை.இது ஒரு மேலதிக விவரமே. பெரும்பாலான சாயி பக்தர்களுக்கு இவை(போன்ற செய்திகள்) பழகிப்போனவையாக இருக்க வாய்ப்புள்ளது.

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040621_saibaba.shtml

ஒலிப்பதிவு ரியல் ப்ளேயரில் இயங்குவது.

நண்பர் ராஜா(நாமக்கல்), அவரது பதிவிலும் இது குறித்து எழுதியுள்ளார். அவரது பதிவி,பின்னூட்டங்களின் முகவரி இது.

 2.தமிழ் செம்மொழியாதல் குறித்த அறிஞர்கள் கருத்து.
==================================================
 கிறிஸ்துவுக்கு முந்நூறுகள் ஆண்டுகள் முன்பிருந்தே தமிழிலக்கியம் எழுதப்பட்டு வருவகிறது என்று அண்மைய ஆராய்ச்சிகள் காட்டுவதாக கூறும் அவர், சமஸ்கிரதம் மற்றும் அதுசார்ந்த மதநிலை பாரம்பரிய இலக்கியங்களுக்கு நிகராக, தமிழ் திராவிட இலக்கியமும் பண்பாடும் இந்திய பாரம்பரியத்தின் கூறு என்பதை ஏற்கும் அறிவிப்பு இது என்று தெரிவிக்கிறார்.

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040610_tamil_classical.shtml

ஒலிப்பதிவு ரியல் ப்ளேயரில் இயங்குவது.


Posted at 12:43 am by karthikramas
Comments  

Friday, July 02, 2004
1. எரித எரிச்சல். 2 பாபா வெர்சஸ் பாபா குழப்பம்


1.இந்த எரிதம் பற்றி படித்தேன்.
===================================

2 விஷயங்கள்.

1. இந்த மின்ஞ்சல் முகவரி சேகரிப்பவர்/சேகரிப்போர் தமிழார்வத்தினால் செய்வாராயின் அதை எதற்கு முகமூடியாய் செய்ய வேண்டும்? ' நேசமுடன்' வெஙக்டேஷ் செய்தது போல வெளிப்படையாக செய்யலாமே?
" ஐயா, என் பெயர் மின்னஞ்சல்மினுக்கனுங்க". நான் இந்த இதழையோ, அல்லது இந்த தமிழ் விஷ்யத்துக்காகவோ கேக்குறனுங்க. விருப்பப்பட்டவங்க இந்த பட்டியலில் சேருங்க என்று சொல்லலாமே? ஏன் செய்யவில்லை. இந்த முகமூடி நமது அஞ்சல் முகவ்ரியை வாங்கிக்கொண்டு நாளை என்ன செய்யும் என்று யாருக்குத் தெரியும். இந்த நம்பகத்தன்மை குறைவாக இருக்கும் செயல்பாடுகளினால் யாருக்கும் ஆர்வம் குறையவே செய்யும். இதைக் கூட அந்த முகமூடியரிடம் நான் கேட்கமுடியாது. ஒரு நட்புடன் அவர் அனைவரின் மின்னஞசல்களையும் கேட்பதால், அதே நட்புடன் இப்படிக் அவருக்கு வேண்டுகோள் வைக்கலாம். "என்னங்க நாளைக்கு எதேனும் பிரச்சினையானவர்களிடம் என் மின்னஞ்சல் முகவரியை அனுப்பிட மாட்டீங்களே? " என்று.

2. நண்பர் முகுந்த் சொல்வது போல் நமது மின் முகவரிகளைக் கொண்டு அவர்கள் பெரிதாய்  செய்துவிடப் போவதில்லை என்பது ஒரு புறம் உண்மையானாலும், மறுபுறம் , ஒவ்வொரு நாளும் வருகிற எரிதங்களைப் பார்த்து எரிச்சல் பட்டு அழித்துக் கொண்டிருக்க யாருக்கும் பிடிக்காது என்பதே உண்மை. மேலும் 6 எம்பி யாகூ மின் தபால்பெட்டியில் தினமும் பல மற்ற முக்க்கிய மின்னஞ்சல்களை திடீரென ஒரு நாள் இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு நாமே ஏன் வாஇ செய்துகொள்ள்வேண்டும். ஹாட்மெயில் உபயோகிப்பவர்களின் நிலைமை அனைவருக்கும் தெரிந்ததே. மதி போல ஒரு 100 வலைப்பதிவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் எந்த தமிழக் கடிதம் எரிதம் என்று தெரியாமல் நல்ல கடிதங்களுடன் குழப்பிக் கொள்ளவும் வாய்ய்பு ஏற்படலாம்.

இலக்கிய ஆர்வமுடைய ஒருவர் கேட்டால் சேர விருப்பமுடையவர்கள் கொடுக்கப் போகிறார்கள். அல்லது "ஸ்பாம்மிங்" என்கிற எரிதம் எறியும் வியாபாராமாய் முயன்றால் எவ்வறெல்லாம் தடுக்க முடியுமோ அவ்வாறெல்லாம் தடுப்பார்கள் என்பதே நடைமுறை. நிற்க.

2.பாபா வெர்சஸ் பாபா குழப்பம்.

================
சமீபத்தில் ஒரு குழப்பம் தீர்ந்தது. இந்த குழப்பத்தினால் உண்டான உபகுழப்பங்களும் தீர்ந்தன.
அந்த பெரிய குழப்பமானது இதுதான். வலைப்பதிவர் பாலாஜி-பாரி என்பவரும் பாஸ்டன் பாலாஜி என்பவரும் வேறு வேறானவர்கள். வலைப்பூவில் சொன்ன புண்ணியவான் நல்லா இருக்கட்டும் சாமீ.

எப்படியோ இவர்கள் இருவரும் ஒருவரே என்று மூளைக்குள் போய்விட்டது. அதிலிருந்து இன்றுவறை. எத்தனை குழப்பம். என்னடா பாஸ்டன் பாலாஜி பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் மாதம் 2,3 முறை பறக்கிறவர் போல என்று ஒரு உபகுழப்பம். அதுதான் பாஸ்டனாரின் இன்றையப் பதிவுக்கு மறு மொழி எழுதிவிட்டோமே. அத்ற்குள் உறுமி மேளத்தில் இன்னொரு பதிவு எழுதியுள்ளாரே? இதை அப்பறம் படிக்கலாம்.
  என்ன மனுஷன்டா இவர்? நம்மை பாஸ்டன் வர்ச் சொல்லிட்டு இவர் பாட்டுக்கு திடீர்னு பெங்களூர் போயிடுவாரோ என்று இன்னொரு பயம். கஞ்சி குடித்துக் களியாட்டம் போட்ட பாமரன், பாஸ்டனாரா இல்லை பெங்களூர் வாசியா என்பது இன்னொன்னு. வெள்ளிக்கிழமை மாலை 4 மணி கிழக்கு கடற்கரை நேரப்படி கஞ்சி குடிப்பவர் பாஸ்டனார்தான் என்று தெளிய வேண்டியுள்லது. போதாகுறைக்கு இவரும் பாபா அவரும் பாபா.
இப்போ இன்னொரு சந்தேகம் , அப்படீன்னா தங்கமணி யேல் பல்கலையில் இல்லையா? ஐய்யோ சாமீ ஆள விடுங்க. :)))


Posted at 04:33 pm by karthikramas
Comments (3)  

Saturday, June 26, 2004
மானே, தேனே, பெருமதிப்புக்குரியவர்களே..

அனமிகா மெய்யப்பன்,
 செல்வராஜ் என் பின்னூட்டத்தில்  சொன்னபிறகே சோடாபாட்டில் அவர்கள்   இது பற்றி கருத்து சொல்லியிருப்பது தெரிந்தது. என் வார்த்தைப் பிரயோகம் குறித்து நீங்கள்  சொல்வதை ஏற்கிறேன். இருந்தாலும் இதைச் சொல்ல விழைகிறேன். ஒரு சமூகப் பெரியவர் அது எந்தச் சமூகப் பெரியவர் எழுதியிருந்தலும் இப்படித்தான் எழுதுவேன். அதிலும் ஒரு சமூகப் பெரியவரின் பேச்சு  அவரைப் பின்பற்றுவர்களின் வாழ்க்கை நடமுறைகளில் பாதிப்பு உண்டாக்கும் பதவியிலோ அல்லது நிறுவனத்திலோ இருக்கும் போது, எனக்கு இன்னும் அதிகமாய் அசிங்கமாய்த்தான் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.இது போன்று தாக்கம் ஏற்படுத்துபவர்களின் அறிவு சாமானியர்களைவிட அதிகமாயும், உயர்ந்த கருத்துடவராயும், இருத்தல் அவசியம். குறைந்தபட்சம் சமானியர்களைப்போலாவது அவதூறான கருத்துக்களைச் சொல்லாதிருத்தல் நலம். 'அன்பே', 'மானே' தேனே,'பெருமதிப்புக்குரியவர்களே' என்று எழுதிக்கொண்டு விஷத்தை விட அபாயகரமான கருத்துகளைச் சொல்வதைவிட எனக்கு என் போல் எழுதுவர்களின் மேல் தான் மதிப்பு அதிகம் வருகிறது.

1. இந்த பீடத்தில் இருக்கும் பெரியவருக்கும் இந்தக் கருத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை யென்பது எப்படி சரியான வாதமாகும். இப்படி கருத்தை வெளியிட்டால் அதைத் திருத்துவதில் அவருக்கு கடமையில்லையா?
2. ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால்கூட, அவர் வேசி என்று சொலவ்தற்கும், நான் தேவடியாள்பையா என்று சொலவதற்கும்  என்ன வித்தியாசம் என்று கேட்கத் தோன்றுவதில் இருக்கும் நியாயம் உங்களுக்கு புலப்படும் என நம்புகிறேன். ஒரே பொருளுள்ள ஒரு வார்த்தை உயர்ந்தாகவும் , அதே போன்ற இன்னொரு வார்த்தை கசப்பாகவும் இருப்பதன் பின்னணியில் உள்ள சமூகச் சிக்கலைக் கொஞ்சம் யோசித்துதான் பார்ப்போமே!. அதே வஞசகமும் சூதும் தான் முழு உருவம் பெற்று பிரினையையும் , மக்களை முட்டாளாக்கவும் ஆக்கியுள்ளது அகலக் கண் கொண்டுப் பார்த்தால் தெரியும். இது போன்றேதான்  உயர்குடி வார்த்தைகள் என்று கீழ்க்குடி வார்த்தைகள் என்று பிரிந்து நிலவுவதை சொல்ல முடியும். உதாரணமாய், சோறு,கஞசி, துன்னு போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே நமக்கு அறுவருப்பு கூட வரலாம். அது நமது தவறல்ல. நாம் உயர்குடி வார்த்தைகளை நம்மை அறியாமலே விரும்புகிறோம் என்பதன் விளைவாக, இதன் காரணம் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. உண்மையை ஆராய்ந்து பார்த்தோமெனில் இவை வெறும் திரிபு மாயைகளே
என்பது விளங்கும்.

3. இப்படி ஒரு (மட)மடத்துக்கு  என்னைப்போல்  ஒரு இணைய எதிரி இருந்து விட்டுத்தான் போகட்டுமே. அதனால் அம்மடத்தின் புனிதம் பாதிக்கப்படாது என்றே உறுதியாக நம்புகிறேன்.எதேனும் சாபம் கீபம் கிடைத்தாலும் சிரமேற்கொண்டு செயலாற்ற ஆவல் சித்தமாய் உள்ளேன்.

4. இது போன்றவர்களுக்கு இருக்கும் எதிர்ப்ப்பை  விரல் விட்டு எண்ணிவிடலாம். இத்தனைபேர்தான் என்று. கொஞசம் கடுகை அதிகமாய்ப் போட்டுத்தாளிப்பதை கடமையாகவே கருதுகிறேன்.

5 ஒரு பெரிய மகான் அல்லது அவரைச்சேர்ந்த கூட்டம் (என்றே வைத்துக் கொள்வோம்) , 'உன் மனைவி வேசி போல் இருக்கக் கூடியவள் என்று ' சொன்ன்னால் கூட , அவரை விடுத்து , அக்கூட்டத்தை விடுத்து ,  மறு எதிர்ப்பாய், சாதரண குடியானவனுக்கு வரு கோபம் போல் எதிர்துள்ள என்னைப் போன்றவர்களின் வார்த்தை மேல் வரும் கோபமும்,அவர் மேல் வரும் பச்சாதாபமும், உங்களைப்  (உதாரணத்துக்கு மட்டுமே சொல்கிறேன் கோபிக்க வேண்டாம் , கருத்தளவிலே யோசிக்கவும்) போன்றவர்களின் நேர்மையையும், அல்லது மூடத்தனமான பக்தியையும் எந்த மனமும் சந்தேகமேப் படும் என்பதைச் சொல்லும் கடமையும் எனக்குளது.
(எதையும் பெர்சனலாக எடுக்கவேண்டாம் என்று தாழமையுடன் வேண்டிக் கொள்கிறேன்).உங்கள் பக்கம் நேர்மையாக ஏதும் கருத்திருப்பின் தயங்காமல் எனக்கு மறுப்பு எழுதுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.


அன்புடன்,
கார்த்திக்


Posted at 01:54 am by karthikramas
Comments (25)  

Thursday, June 24, 2004
என் குடும்ப போட்டா.. :p

வாசன் வலைப்பூவில், ஒரு நாய் குடும்பத்தைப் பற்றிஎழுதி, போட்டா போட்டதும் எனக்கும் என் குடும்ப போட்டா (?) போட ஆசை வந்துவிட்டது.என்ன்னுடைய படங்களையும் என் குடும்ப படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
angrylion

1.இது நான் போட்டா ஸ்டுயோவில் அழகாக போஸ் கொடுத்து எடுத்தது. படத்திலிருப்பது நான் தான். ஆறறிவுள்ள (அ)சிங்கம். இன் இங்கிலீஷ், சிக்ஸ்த் சென்ஸ்டு சிங்கம். :)
baduy

2. இது ஹாலோவீன் பண்டிகையின் போது அணிந்தது. பட்டப் பெயர் சங்கிலிக் கருப்பன்.
childhood
3.இது நான் 2 வயதில் இருக்கும் போது எடுத்த படம். அப்போது எனக்கு 2 பற்கள்தான் இருந்தது. ஹொவ் கியூட் :)
dady shouts

4. இது என் மதிப்புக்குரிய தந்தை. ஒரு முறை காலேஜ் கட் செய்துவிட்டு சினிமா பாக்கப் போனபோது திட்டினார். அப்போது எடுத்தது. அவருக்குத் தெரியாது.
drawing

5.இது என் அக்காப் பையன் ஸ்கூல் ஒவியப் போட்டிக்கு வரைந்தது. மனிதனை வரைந்த இன்னொரு குழந்தைக்கு போனது ம்தற்ப் பறிசு :-(. இவனுக்கு 2 ம் பரிசு.

Family
6.இது நானும் என் அப்பாவும் தஞ்சாவூர் போயிருந்தபோது எடுத்தது.

family3

7.இது அப்பா ,பெரியப்பா மற்றும் நான். போர்ட்ரைட் செய்தது. வீட்டு ஹாலில் மாட்டியிருப்பது.
family3.realjpg

8.இது அப்பா, அம்மா மற்றும் நான். ஒரு ஞாயிற்றுக் கிழமை அருகில் இருக்கும் பார்க் போனபோது எடுத்தது.
father_works

9.அப்பா வேலையிடத்தில் எடுத்தது. இரைக்காக கால் கடுக்க காத்திருக்கிறார். பாவம்.
grandpa

10.இது எங்கள் ஊரை ஆண்ட இன்கிலாந்தையர்களில் ஒருவர். அவரது இந்த சிலை இருக்கும் இடம் இங்கிலாந்து.
malaivaazLion

11. எங்கள் சமூகத்தில் சிலர் மலைவாழ் பழங்குடிகள். ஆனால் அவர்களுக்கும், பாரம்பரிய கலாச்சாரம் உண்டு. 'மலை வாழ்'னு சொன்னா கோபம் வரும். :)

marapuooviam

12.இது பழங்கால மரபு ஓவியம். A sage.
modernart

13.இது இக்காலத்திய மாடர்ன் ஆர்ட். ஒரு நடிகை. என்னே அழகு!.
portrait

14. இது நான் தான் 2 வருடங்களுக்கு முன் நியூ யார்க் செல்லும் போது ரோட்டு ஓரத்தில் போர்ட்ரைட் செய்த படம். ஸ்கான் பண்ணிப் போட்டிருக்கேன்.
sciencedevlopment

15.இது எங்கள் சமூகத்து விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் படம். எக்ஸ்-கேட்-007 மாடல். அதி நவீனமானது. இப்போது இதை பறக்க வைக்க முற்சி செய்து கொண்டுள்ளார்கள்.

toylion
16. இது அம்மா எனக்கு வங்கித் தந்த பார்பீ டால். பழசானதில் கொஞசம் டல் ஆயிட்டுது. என்ன? என்னுடைய படங்களில் நான் எப்படி இருக்கிறேன்.? அதி ஸ்மார்ட்தானே? :)

Posted at 12:22 am by karthikramas
Comments (7)  

Tuesday, June 22, 2004
காம கோடியா ? காமக் கேடியா?

ரொம்ப நாளா தோழியர் பதிவுகளை பார்க்கவில்லையே என்று சென்றிருந்தேன். அங்கு நடந்த உரையாடலின் விளைவு இந்தப் பதிவு.

http://www.kamakoti.org/tamil/pen2.htm

>>பணிவிடை செவ்தில் வேலைக்காரியாகவும்,
>>ஆலோசனை கூறுவதில் அமைச்சராகவும், அழகில்
>>லக்ஷ்மியாகவும், பொறுமையில் பூமாதேவியாகவும்,
>>பள்ளியரையில் வேசியாகவும், விளங்குபவளே குலப்
>>பெண்ணாவாள். இப்படி உலகில் குடும்பப் பெண்
>>கணவனோடு இரு சரீரங்களுடன் ஒரு மனத்துடன்
>>வாழ வேண்டும்.


இந்த பக்கத்தைப் படித்தவுடன் நினைத்ததை அப்படியே
எழுதியிருந்தேன் எனில் யாரும் படிக்க முடியாது.
தூத்தேறி! ஒரு ஞான பீடத்தின் லக்ஷ்ணம்இதைவிட கேவலமாக இருக்க முடியாது. அசிங்கமா வருது வாயில தே... (அட கெட்ட வார்த்தைங்க)அதே லாஜிக்கில் இங்கு பீடத்தில் தலைவராய் இருப்பவரின் தாயாரும் கூட அவரது த ந்தைக்கு வேசி போலவே இருந்தார் என்று மனம் கூசாமல் எல்லோரும் சொல்வார்களா? அதை ஏற்றுக் கொள்வார்களா? அப்படி வேசி போல் இரு ந்தவரை வேசி என்று வரது தந்தை அழைத்தால் சரி என்று சொல்வார்களா? வெட்கங் கெட்ட ஜென்மங்கள். இப்படி அறிவற்ற ஒரு கருத்தை எப்படி கூச்சமில்லாமல் அறிவுரை என்று சொல்ல முசிகிறது.

>>இந்த உலகம் எப்பொழுதும், யாரால் படைக்கப் பட்டதென்று இன்னும்
>> நிர்ணியக்கப்படவில்லை. ஆகவே அநாதி காலந்தொட்டு உலகம் இருந்து >>**வருவதாகச் சொல்கிறார்கள்.**

இது போன்ற அறிவான சமாச்சாரங்களில் ஆழப் பேசுகிறார்களா பாருங்கள். அதெல்லாம் பேசத்தெரியாது. விளக்கிச் சொல்லத்தெரியாது. வெட்டி அறிவுரைக்கு ஒன்னும் குறைச்சல் இருக்காது.  இ ந்த மாதிரி விஷயங்களில் மட்டும்  "சொல்கிறார்கள்" , "அந்த மந்திரம் சொல்லுது" , "இந்த மூத்திரம் சொல்லுது " என்று மூடி மறைத்துவிட்டு, பெண்களை மட்டம் தட்டும் கருத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஆண் கும்பல் பேசி பெருமை அடைந்து கொள்கிறது.

ஏன்? இந்த மந்திரம் இப்படி சொல்லியுள்ளது , ஆனால் இது இ ந்த காலத்துக்கு பொருந்துவதாக இல்லை என்று நிராகரித்திருக்கலாமே. அல்லது
குறைந்தது *அப்படி சொல்லியிருக்கிறார்கள்*, எனக்கு சரியாக விளங்கவில்லை என்றாவது சொல்லலாமே? இந்த கருத்து நமது மானமிழந்த சமூகத்தில் எளிதில்
விற்பனையாகும் சரக்கு எனவேதான் "அறிவுரை" என்ற பேரில் விற்கிறார்கள்.

>>உண்மையான குடும்பப் பெண்ணானவள் தன்னுடைய பதியின் மீது எந்தவித
>>உவச்சொல் ஏற்பட்டாலும், அதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாது
>>என்பதுதான் கலை. குடும்பப் பெண் கணவனிடம் எப்படியிருக்க
>>வேண்டுமென்று நீதி நூல் கூறுகிறது.

அட நாசமா போனவனுங்களே! ஏண்டா இப்படி எழவெடுக்கிறீங்க?
காம கோடி பீடத்தை பின்பற்றுபவர்கள் , குடும்பஸ்தர்கள் இ ந்த நீதியை
பின்பற்றுவார்களா? பின்பற்றத்தான் முடியுமா? அட இப்போதைய பெண்களை விட்டு விடுங்கள். அ ந்தகாலத்துப் பெண்கள் கூட இதைப் பின்பற்ற முடியுமா?
  இ ந்த எழவெடுத்த நீதி சொல்வது போல் நடக்கலாம் என்றால், எல்லா பதிகளும் திருடனாய் கொலைகாரனாய் கூட இருக்கலாமா? யார் என்ன சொன்னாலும் அதை பத்னி கேட்டுப் பொருட்படுத்தக்கூடாதா? போலிஸ் பிடித்துக் கொண்டு போனால் கூடவா? மனைவியை வேசிபோல் என்று நினைப்பவன் வேறு என்ன சொல்லப்போகிறான். அட அநியாயக்காரர்களே! உங்கள் அகராதிப்படி வேசி என்பவள் யார் ? பத்தினி என்பவள் யார்?

>>இதை வைத்துத்தான் நமது வீடுகளிலே திருமணம் நடக்கும்போது, "கௌரீ
>>கல்யாணம் வைபோகமே, சீதா கல்யாணம் வைபோகமே" என்று
>>பாடுவார்கள்.

ஏன்? நீங்கள், "வேசியாய் இருக்கப் போகிறவள் கல்யாணமே" என்று கூட மந்திரம் சொல்லலாமே? சொல்வீர்களா?

>>அப்படிப்பட்ட பரம்பொருளை அடைவதற்கும், உலகில் நடப்பைச்
>>சொல்வதற்கும், உருவ வழிபாட்டையும் அநாதி காலந்தொட்டு ஹிந்து சமம்
>>ஏற்றுக் கொண்டுள்ளது.

அடக் கொடும் பாதகா, இப்படி ஒரு அப்பட்டமான பொய்யா?
" நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் "
என்ற திருமூலரின் பாட்டுக்கு என்ன அர்த்தம் சொல்வீர்கள்?
திருமூலர் சைவரே கிடையாது என்று சொல்லப் போகிறீர்களா?

 இந்த மாதிரி ஜென்மங்களின் கையில் இந்து மதம் சிக்கியது கூட பரவாயில்லை. இவர்களை நம்பி யாரும் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வார்களே என்றுதான் புலம்ப வேண்டியுள்ளது.


Posted at 09:53 pm by karthikramas
Comments (3)  

f (X) = 1 / 9 * ( X ^ 2)

f (X) = 1 / 9 * ( X  ^ 2)
 தலைப்பைப் பாத்துட்டு, என்ன இது குரங்கின் வேலை ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சான்னு கேக்காதீங்க.
இணையத்திலிருந்து உருவிய ஒரு சூத்திரம் இது. தார் போட்ட ரோடுகளில்  கார் செல்லும் வேகத்தைக் கொண்டு இரண்டு கார்களுக்கும் இடையில் தேவைப்படும் இடைவெளியை கணக்கிடுவத்ற்கு இச்சூத்திரம் பயன்படுகிறது. (உபயம்: http://calculator.maconstate.edu/ave_rate_change_lesson/ )
  இந்தச் சூத்திரத்தின் படி  30 மைல் வேகத்தில் செல்லும் ஒரு காருக்கு முன் 100 அடிகள் இடைவெளி தேவை. அதே போல 60 மைல் வேகத்தில் செல்லும் ஒரு காருக்குமுன் தேவையான இடைவெளி 400 அடிகள். (அது எப்படி 30 க்கு 100 60 க்கு 200 தானே என்று குதிரைக்கு குர்ரம்னு கேக்காதீங்க.) சூத்திரத்தைப் பயன்படுத்தினால் அப்படித்தான் வருகிறது. 400 அடியா யோவ் நீ என்ன அமெக்காவுலதான் இருக்கியான்னு என்னைக் கலாய்த்துப் பயனில்லை. அப்புறம் பாசமலர் சிவாஜிகணேசன் ரேஞ்சுக்கு சோகமான , விபத்துக்களைப் பற்றி எழுதி உங்களையும் அழ வைச்சுடுவேன் ஜாக்கிரதை.
  அட 400 வேண்டாமுய்யா, 60 மைலுக்கு க்கு ஒரு 100 விடுங்களேன் , மறுபடியும் வாழ்றதுக்கு ஒரு தூரத்து நம்பிக்கைக் கிடைக்கும். :)  என்ன விடுவீர்கள்தானே?

Posted at 12:06 pm by karthikramas
Comments  

Monday, June 21, 2004
இடைவெளி விடுமின் இன்புற்று வாழ்மின்...

இடைவெளி விடுமின் இடைவெளி விடுமின்
  இது அமெரிக்காவில் பிளசர் கார்(இன்ப ஊர்தி?) ஓட்டுபவர்களுக்கு  தலையில் ஒரு குட்டு வைக்கும், அறிவுரை வழங்கும் முயற்சி.

  ஐ- 495 ல் வந்து கொண்டிருந்தேன். வழக்கமாய் எடுக்கும் வெளிப்பாதையை(எக்ஸிட்) விடுத்து 2 வெளிப்பாதை தாண்டி எடுக்கலாம் என்று உள்ளே இருக்கும் (மனக்) குரங்கு சொன்னது. ஏன்னு கேட்டேன், லோக்கல் சந்து பொந்துகளில் ஓட்டுவதை விட 495-ல் ஓட்டினால் வேகமாய் வீடுபோய்ச்சேரலாம். மேலும் 65 மைல் வேகத்தில் போகலாம் என்று கொஞ்சம் தங்கிலிஷ் கலந்த பாசையில் சொல்லியது. சரி இது பேச்சை கேட்டுத் தொலைப்போம் என்று வந்து கொண்டிருந்தேன்.

  ஐ- 495ன் எதிர்ப்புறம் எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. அதாவது காலியாய் இருந்தது மொத்த ஒருபக்க ஐ- 495 ம். இது போல் சுத்தமாக நிறுத்தப்பட்டு நான் ஒரே முறை முன்பொரு சமயம் பார்த்துண்டு. ஆனால் காலைவேளைகளில் ஜனநெருக்கத்தினால் ஐ- 495 சாதாரணமாகவே நிறுத்தப்பட்டது போல்தான் 5 அல்லது 10 மைல் வேகத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். என்னடா இது நம்ம வரோம்னு யாராவது காவல் துறைக்கு செய்தி அனுப்பிட்டாங்களா? அப்ப கூட நமக்கே வழி விட மாட்டீகிறானுங்களே! - இது உள்ளே இருக்கும் குரங்கு. குரங்கின் பேச்சைக் கேட்காமல் எதிர்ப்பாதையில் என்ன நடந்தது என்று நோட்டம் விட்டேன். மூன்று கார்கள். மூன்றாவது கார் வலப்புற பதையின் தோள்ப்பகுதியிலுள்ள (ஷோல்டர்?) த்டுப்புக் கம்பியின் மீது மோதி தலை உடைந்து கிடந்தது. காரின் இருந்தவனுக்கு/இருந்தவளுக்கு  நிச்சயமாய் தலைச்சேதம் உண்டாகியிருக்கும் என்று தெரிந்தது.
  அருகில் கம்பீரமாய் ஸ்டேட் ட்ரூப்பர் (மாநில காவல்ப்படை அதிகாரி)  எதிர்ப்புற சாலையில் அதி வேகத்தில் முதலுதவிக்காய் சென்று கொண்டிருந்தார். 1 நிமிடத்துக்குள்ளாகவே ஒரு ஆம்புலன்ஸ் (மருத்துவ உதவு வண்டி) வந்து கொண்டிருந்தது.
 
  அமெரிக்காவில் 90 மைல் வேகத்தில் சென்றால் கூட சில சமயங்களில் நாம் வேகமாய் செல்வது போல் தோன்றாது. எனது சிவில் பொறியியல் படிப்பில் ட்ராபிக் பொறியியல் என்ற பாடமுண்டு.
அதில் முக்கியமாய் ஒரு விதியை வலியுறுத்துவார்கள். அது ஒவ்வொரு 10 கி.மீ வேகத்துக்கும் ஒரு கார் நிறுத்த இடைவெளி அவசியம் என்பது. இதௌ ஆங்கிலத்தில் ப்ரேக்கிங் டிஸ்டன்ஸ் என்று சொல்வார்கள். அமெரிக்காவில் இந்த இடைவெளியை பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை. காரணம் மிகவும் பழக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு இது அவசியமில்லை என்று தோன்றலாம். அல்லது வேகமாய் போய் சாதிக்க வேண்டிய கலெக்டர் வேலை இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் இடைவெளியைக் குறைத்தல் ஒரு மிகவும் அறிவீனமான செயல். (கொஞ்சம் உறைக்கட்டுமே என்றுதான் இந்த பதப் பிரயோகம் :)) அறிவியலுக்கு மாற்றமான செயல்.

பிரேக் பிடிக்க நினைக்க ஆரம்பித்து  நமது கால் பிரேக்கை பிடிக்கச் செலவாகும் நேரம் குறைந்த பட்சம் 2 விநாடிகள் என்று கணக்கிட்டுள்ளனர். அப்போது வண்டி செல்வதற்குத் தேவையான தூரம்தான் ப்ரேக்கிங் டிஸ்டன்ஸ் அல்லது நிறுத்து தூரம்.

அப்படியெனில் நமக்கு முன்னால் எல்லாவனும் கட் பண்ணிப் போவானுங்களே என்று அழுவாதீர்கள். அது ரொம்ப சாதாரண பிரச்சினை பாபுகாரு. :)

எனவே,
 இடைவெளி விடுமின் இடைவெளி விடுமின்
 இடைவெளி விடுமின் இன்புற்று வாழ்மின்.

(தொடரலாம்...)


Posted at 03:00 pm by karthikramas
Comments (4)  

Tuesday, June 15, 2004
சட்டமும் அதற்கப்பாலும்...

   நேற்று என் பி ஆர் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தேன்.
நிகழ்ச்சி, டார்ச்சர் எனப்படும் துன்புறுத்தல் என்பதை அமெரிக்கா எப்படி வரையறுக்கிறது என்பது பற்றி.  ஒரு பத்திரிகையாளர் ஜனாதிபதி புஷை ஒரு கேள்வி கேட்டார்.
அது "எந்த வகையிலாவது துன்புறுத்தலை நியாயப்படுத்துகிறீர்களா?" என்பது.அதற்கு அதிபர் புஷ் வழக்கம் போல ஒரு உளறலை உளறிவைத்தார். அதன் சாராம்சம்,"புத்தகத்தில் இருக்கும், துன்புறுத்தலுக்கு எதிரான வாதங்கள் உங்களுக்கு மனதிற்கு சந்தோஷத்தைத் தரலாம். ஆனால் அவை வெறுமனே புத்தகங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டுமே. அவற்றைக் கொண்டு நாம் எதிர்பார்ப்பதை செய்யமுடியாது" என்றும் சொன்னார். என் பி ஆர் செய்தியிலும் இப்படி ஒரு மசாலா பதிலை தருகிறாரே என்று ஆதங்கப்பட்டார் செய்தியாளர். இருந்தாலும் மிகவும் மென்மையாகவே செய்தியாளர் சொல்லியிருந்தார்.

 மேலும், 2002-பெண்டகன் அமெண்ட்மென்ட், ஜனாதிபதிக்கு போர்க்கால நடவடிக்கைகள் போல அல்லது போரை நடத்துகையில் வீரர்களை களத்துக்கு கொண்டுவருவது போலவே அவருக்கு , சட்டத்ததைவிட மேலதிக அதிகாரம் இந்த துன்புறுத்தல் விவகாரத்திலும் உள்ளது என்று சொல்லப்பட்டிருப்பதாகவும் செய்தியாளர் ஒருவர் பேசினார். இது மிகவும் சர்ச்சைக்குரிய ,விவாததிற்குரிய சட்டத் திருத்தம்மாக உள்ளது என்று செய்தியாளர் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதிக்கு மட்டும் என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. சர்வதேச சட்டத்தையும் மதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே மிதிக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி பதவியின் பெயரை உலகாதிபதி என்று பெயரை மாற்றிக்கொண்டால் கூட பொருந்தும் போல உள்ளது.

ரிபப்ளிக்கன் ஒருவர், துன்புறுத்தல் என்பது அமெரிக்க வரலாற்றிலேயே கிடையாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக, புளுகி முடித்தார். இப்பொழுது மேசை மீது அந்த பிரச்சினையே இல்லை என்று சொன்னார். கைதிகளை துன்புறுத்துவது குறைத்த வரையறைகள் சர்வதேச சட்டத்தில் எப்படி உள்ளது என்றும் அவை அப்படி பினபற்றப் படுகின்றன எனபது குறித்து மேலோட்டமான பகிர்வாக இருந்தது அந்நிகழச்சி.

என்னைப்பொறுத்துவரை, துன்புறுத்தலை வரையறுக்க ஒரு மருத்துவ அளவீடு தேவை. அது உடலில் செலுத்தப்படும் விசை, சாதரணமற்ற ரத்தவெளிப்பாடு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்த மாறுதல் போன்றவற்றின் அடிப்படையிலும் இன்னும் இது போன்ற காரணிகளைக் கொண்டும் வரையறுக்கப்படவேண்டும். அது சர்வதேச சட்டத்தினால் பின்பற்றப்படவேண்டும். சர்வதேச அமைப்பினால் நியமிக்கப்பட்ட மருத்துவர்களைக்கொண்டு கைதிகளின் உடல் நிலைகுறித்து சில மாதங்களுக்கு ஒருமுறை அல்லதுதாஆண்டுக்கு ஒருமுறை என்பது போல் சான்றிதழ்கள் வழங்கப்படவேண்டும். உண்மைகளை வரவழைக்க , வலியில்லாத,உயிருக்கு தீங்கற்ற  போதை மருந்துகளை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கும் ஒரே நேரத்தில் இந்த அளவுதான் கொடுக்கபடவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கவேண்டும்.

இப்படி யோசித்துப்பார்த்தால் விந்தையாக இருக்கிறது. ஒருவேளை, இராக் அமெரிக்காவின் மீது படையெடுத்து, வென்று அமெரிக்க ஜனாதிபதி, செய்தித்தாள்களில் "பழைய அமெரிக்க ஜனாதிபதி" யாகி, இராக் சிறையில் இருந்தால் , மனித உரிமை மீதும் , துன்புறுத்தல் மீதும் இன்னும் முறையான கவனம் செலுத்தி யோசிப்பார் என்று நினைக்கிறேன்.  கவுண்டானமோ வளைகுடாவில்(jail) நடப்பது புஷக்கே வெளிச்சம்.

சிறைக்கைதிகளின் வாழ்வை ஒளி/ஒலிபரப்ப ஒரு பொது சாட்டலைட் தொலைக்காட்சி சேனல் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கைதிகளில் வாழ்க்கையை பொது மக்களுக்கு முடியாவிட்டாலும் சர்வதேச சட்ட அமைப்புக்கு ஒளிபரப்பௌவது அவசியம்.இந்த மாதிரி உரிமையைப் பற்றி பேசினாலே, காசில்லை என்ற பாட்டை பாட ஆரம்பித்துவிடுவார்கள். போருக்கு ஆவதைவிட குறைவாகத்தான் ஆகும் எனத் தோன்றுகிறது.

இந்த பதிவை நேற்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். நிறைய விஷ்யங்கள் நினைவைவிட்டகன்றிவிட்டது.
இன்று சி என் என்-ல் இராக் பழைய அதிபர் சதாம் உசேன், இராக் அரசிடம் இன்னும் சில காலத்தில் ஒப்படைக்கபடுவார் என்று செய்தி வந்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய செய்தி. இம்முடிவை புஷ் அறிவித்தார் என்றும் சொன்னார்கள். கிட்டத்தட்ட "உலகாதிபதி பெரிய மனசு பண்ணி பிச்சை போட்டார்" என்ற கணக்கில். இந்த புத்திற்குள் எந்த பாம்(போ)?

இந்நிகழ்ச்சியை கேட்டவர்களின் கருத்தை அறிய ஆசைப்படுகிறேன். "துன்புறுத்தலை" வரையறுக்கவும் மேலதிக விவரங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.


Posted at 11:18 pm by karthikramas
Comments (4)  

Tuesday, June 08, 2004
பெலிகனிலிருந்து பென்குவின் வரை...


  விங்க்ட்  மைக்ரேஷன் என்ற டாகுமெண்டர்ரி பார்த்து சொக்கியே போய்விட்டேன்.பாதியிலிருந்துதான் பார்க்க ஆரம்பித்தேன்.

கூஸ்,பெலிகன்,பென்குவின்,கிளிமூக்கு பெலிகன்,கொக்கு, பஞ்சவர்ண கிளி போன்ற ஒரு பல வர்ண கிளி,ஒரு குருவி ஆகிய பறவைகள் பறந்து கண்டங்கள் கடந்து செல்வதை படம்பிடிப்பதுதான் படத்தின் கரு(?). இந்த பறவைகள் வட அமெரிக்காவின் மீது பறந்து கடந்து(?) ஆப்பிரிக்கா செல்வதுதான் இவைகளின் பயணம். வட அமெரிக்காவில் தங்குவது குறித்து அவைகளுக்கு பெரிய அக்கறை இருக்கவில்லை போலத் தெரிகிறது. ஒருவேளை வேடந்தாங்கலோ ஆப்பிரிக்காவோதான் அவைகளுக்கு வாடாத வட அமெரிக்கா போல.மொத்தமாய் சொன்னால் ஒரு ட்ராபிகல் (வருட முழுதும் சமதட்பவெப்பமுடைய) நாட்டுக்கு செல்வதுதான் இவைகளின் ஆசை. ஆனால் பாதி வழியே பல ஆயிரக்கணக்கான பறவைகளில் பல ஆயிரங்கள் இறந்து விடுகின்றன்.
    இந்த படத்திலே பல விதங்களில் இப்பறவைகள் இறப்பதை பார்க்க முடிந்தது. ஒன்று தனது ஒரு சிறகு அடிபட்டு தவிக்கிறது. ஒரு நல்ல சிறகை கொண்டு பறக்க சில நிமிடங்களாக முயல்கிறது.இருப்பதோ கடற்கரை. ஒரு பெரிய கொடுக்கை கொண்டை நண்டு ஒன்று துரத்துகிறது. அந்த தலைவன் நண்டின் தைரியத்தில் பல நண்டுகள் பின்னாடியே படையெடுத்து வருகின்றன. பறவையோ தத்தித் தத்திக் கடலருகே வந்துவிட்டது. என்ன ஆனது? வேறென்ன!  தேனிக்கள் தேன் பத்தையை மொய்ப்பது போல் ஒரு 50 ஜதை கொடுக்குகள் அந்த மிகமெல்லிய பறவை மீது தனது பலத்தை பரிசோதித்துவிட்டு மெதுவாய் நகர்கின்றன.

இன்னொரு பறவைகூட்டம் ,லேசாய் இறைக்கைகளுக்கு ஓய்வு கொடுப்பதாய் ஒரு ஆலையின் மீது இறங்குகிறது. அந்த ஆலையில் ஏதோ ஒரு பெரிய தொட்டி நிறைய களிம்பு போல் உள்ளது. அதில் இறங்கிய பறவைக்கூட்டத்தில் ஒன்றின் இறக்கை லேசாய் ஒட்டிக்கொள்கிறது. களிம்பின் தன்மையால் பறவை மெல்ல மெல்ல அமிழ ஆரம்பிக்கிறது. உடனே உஷாராய் தனது இன்னொரு இறக்கையை கொண்டு பறக்க எத்தனிக்கிறது. இல்லை லாபம். மெதுவாய் அமிழ்ந்து சாகிறது. இந்தப் பறவை லேசாய் இறக்கையை படபடவென சத்தம் கொடுக்க ஆரம்பித்தவுடன் அருகே இறங்கிய அத்தை பறவைகளும் உடனடியாக பறந்து செல்கின்றன. விதி களிம்பு ரூபத்தில் அப்பறவையோடு உறவாடுகிறது.

இன்னொரு பறவை,கூஸ் வகை,காய்ந்து எலும்புக்கூடாய் கட்ற்கரை ஓரத்தில். கேட்க நாதியில்லை, அனாதைப் பிணம் போல.

   கூஸ் என்ற பறவை சாதாரணமாய் சாம்பல் நிறமுடையதாய் உள்ளது. கழுத்து அத்தனை நீளமில்லை. கால்கள் கொஞசம் பலமானவை. இறைக்கைகளை சற்றே வேகமாய் 'டக் டக்' எனச் சொல்லும் நேர வேகத்தில் அசைத்து பறக்கிறது. இவைகள் ஒரு 20 பறவைகளாக கடலின் மேல் ப்றக்கிண்றன.ஆம்! கடலின் மேல் என்றால் கடலின் மேல்தான். முன்னால் பின்னால் வல இடப்புறமெங்கும் கடல். கரைகள் வரும் வரை இறைக்கை இளைப்பற்றுவதில்லை இவைகள். ஆனால் சில நேரங்களில் லேசாய் இறைக்கைகளை அசைக்காமல் ஓய்வெடுத்துக் கொள்கின்றன. அவற்றைப் பார்த்தால் நமக்குதான் பயம் வருகிறது. இத்தனை தூரம் பறக்க வேண்டுமே என்று. சிகப்பு மார்புடைய கூஸ்கள்
கிழக்கு ஐரோப்பா மீது பறந்து எங்கோ செல்கின்றன. எங்கே? :)  ஐரொப்பாவில் சில நாட்கள்,விருப்பப்பட்டால் ஓய்வு இல்லையேல் அதுவுமில்லை. இவைகளின் கூட்டத்தில் சில குமாரப்பருவ பறவைகள். இவைகள் தங்களின் பெரியோர்களுடனே பறந்து வழிகளை நினைவு வைத்துக் கொள்கின்றன. எங்கே ஓய்விடம் , டீக்கடை, காலை உணவு என்ற சங்கதிகளையும்.ஆண்டுக்கு இருமுறை இவ்வாறு கண்டப் பிரயானம் செய்வதாய் சொன்னார்கள்.

பெலிகன்கள்: இவற்றுக்கு மெல்லிய கால்கள். தாடை அருகே துணி போன்ற மிகப்பெரும் பை அமைப்பு உள்ளது. ஒரு 6 அங்குல மீனை அப்படியே லபக்'கென்று உள்ளே தள்ளுகின்றன. நம்மால் ஒரு முழு இட்லியைக்கூட முழுங்க முடியவில்லை. இவைகளின் ஜீரணம் மிகவும் உறுதியான அமைப்புடையதாய் இருக்கவேண்டும். பாதி குற்றுயிரும் குலை உயிருமாய் உள்ளே போகும் மீனுக்கு உள்ளேதான் பால் ,3ம் நாள் , 10 நாள் , கருமாதி எல்லாமே. இவைகள் கொஞ்சம் மெதுவாகவே இறைக்கைகளை அசைகின்றன. கிட்டதட்ட ' சலக்கு சலக்கு ' என்பது போல. பறக்கும்போது தனது நீண்ட கழுத்தை ஒரு மடிப்பாய் கீழே தொங்கவிடுகின்றன. சில சமயங்களில்,தண்ணீருக்கு ஒரு 2 அடி மேலே பறக்கின்றன. இவற்றில் ஒருவகை கிளிமூக்கு பெலிகன்கள் உள்ளன.வெள்ளை நிற உடல் கொண்டவை. மூக்கு கிளியைப் போல் வளைந்து உள்ளது. இன்னொரு வகை பெலிகன்களுக்கு
கழுத்து மெல்லியதாய் நீளமாய் பார்க்க பாம்பு போல் உள்ளது. இந்த நீளக் கழுத்தை, தன் அலகில் குத்திய மீன்களை தூக்கி யெறிந்து கேட்ச் பிடித்து வாய்க்கு உள்ளே தள்ளுகின்றன.

 

பென்குவின்கள்: ஒரு குட்டி பென்குவின் கரையின் மேல் ஏற 1 நிமிடத்துக்கும் மேல் முயற்சி செய்தது.பென்குவினில் எதோ ஒரு மென்மை இருக்கத்தான் செய்கிறது. முதுகு முழுக்க ஒரு நீலக்கலரு ஜிங்குச்சா.கழுத்துக்கு அடிபாகத்தில் ஒரு மஞ்சள் நிறம். மாலை போல. லைனக்ஸ் பொம்மையில் பார்ப்பீர்களே அதுவேதான். தனது இரண்டு கால்களிலும் முட்டையைப் பிடித்து நோட்டம் பார்க்கிறது. முட்டை,  இரண்டு கைகளின் இரட்டை விரல்களை இரட்டை இலைசின்னம் போல செய்து ஒரு கைக்குள் ஒன்றை பொருத்தினால் எப்படி இருக்குமோ அப்படிதான் குழ்ஞிகளுக்கு உணவு ஊட்டுகிறது.
கும்பலாய் கிளம்பி குளிக்க போகின்றன. பேசிகொண்டேதான். குட்டியார் தூங்கிவிட்டார் போல. ஒரு  பென்குவின் தனியே நடக்கும்போது பார்த்தால் அதன் உடலசைவு ஒரு அமெட்சூர் பண்ணையார் போல் உள்ளது. இறைக்கையை பக்கத்தில் சேட்டை செய்யும் இன்னொன்றை அடிக்க மிக வசதியாய் பயன்படுத்துகின்றன. பென்குவின்களுக்கு நடுவில் ஒரு சீல் ஒன்று ரொம்ப நெருங்கிய சொந்தக்காரர் போல ஊர்ந்து போனது.

படத்தின் முடிவில் ஒரு குருவி ஒரே மரத்தில் ஒரு கிளைவிட்டு இன்னொரு கிளைக்கு தாவிச்சென்றது. இரண்டு கிளைக்கும் நடுவிலேதான் அதன் பறக்கும் பயணம். எங்கே விழுந்துவிடுவோமோ என்று பயந்து கொண்டே கிளையை கெட்டியாய் பிடித்திக்கொள்கிறது.  ஆயிரம் மைல்கள் தொடர்ந்து பறக்கும் பெலிகன்களும்,கூஸ்களும் இருக்கின்றன. அது போலவே அரையடிதூரம் பறக்கும் குரிவிகளும், பறக்காத பென்குவின்களும் இருக்கின்றன.

---
பி.கு:இது ஒரு கிறுக்கலே.. அதுவும் ஒரு கிறுக்கினுடையது. :)


Posted at 10:21 pm by karthikramas
Comments (5)  

Monday, May 31, 2004
சு.கி. சிவத்தின் சுக்காரொட்டிப் பேச்சு..

   இன்று காலையில் நண்பனின் வீட்டில் சன் தொலைக்காட்சியில் சு.கி. சிவம் அவர்களின்
ஒரு உரையைக் கேட்க நேரிட்டது.
  
    சுகி சிவத்தின் நண்பர் ஒருவர் தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைத்து அழைக்க 6 மணிநேரம் பயணம் செய்து இவர் வீட்டிற்கு
வந்து "நேரில் அழைத்தாராம்".  சுகி சிவமோ, ஏண் நேரில் வந்து அழைத்தால் தான் திருமணத்துக்கு வருவேனா? தபாலில் அழைத்தால்
வர மாட்டேனா? என்று கேட்டாராம். அதைக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னாராம் அழைத்த நண்பரிடம்.

  அந்த க்ஷணத்தில் சுகி சிவத்தின் ஒளிவட்டத்தில் பிறந்த கருத்துதான், இனியாரும் நேரில் சென்று அழைப்பது நேரவிரயம் என்பது.
நேரம் பொன்போன்றது என்ற பழைய குருடி கருத்தை பிரதிபலிக்க, தனது ஒளிவட்டத்தில் பிறந்த ,"நேரில் அழைப்பது பாவம், மேலும் நேரவிரயம்" என்ற கருத்தை சன் தொலைக்காட்ட்சியில்  காலையில் வேலைமெனக்கெட்டு ஒரு அரைமணிநேரத்தை செலவு செய்து
நேயர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

  இந்த மாதிரி அரைவேக்காடுகளை அறிஞராய் காட்டும் சன் தொலைக்காட்சியை என்ன செய்வது?
பேரறிஞர் சுகி சிவத்துக்கு சில கேள்விகள்!  அவரது நண்பர் 6 மணி நேரம் பயணம் செய்து வந்தார் என்றால் என்ன பொருள்? நேரவிரயம் செய்கிறார் என்றா?  அவர் சுகி சிவத்தின் வீட்டில் தங்கியிருக்க வில்லை என்று பொருள். அல்லது சுகிசிவத்தை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்காதவர் என்று பொருள்.  எனவே தனது வாழ்வின் மிக முக்கியமான திருமணத்தைச் சாக்காக கொண்டு தந்து அன்புக்கு
பாத்திரமானவரை சந்திக்க வருகிறார் என்று பொருள். எல்லாவற்றுக்கும் மேலாக , தமிழ் நாட்டில் "நேரில் அழைத்தல்தான் கெளரவம்" என்ற கோட்பாட்டை மனதில் கொண்டு, சுகி சிவம் தனது திருமணத்துக்கு வந்துவிடுவார் என்று நிச்சயித்துக் கொள்கிறார் என்று பொருள்.
  சுகி சிவம் தனது வீட்டுத் திருமணங்களுக்கு யாரையுமே நேரில் சென்று அழைக்காதவரா? குறைந்த பட்சம் இனிமேலாவது அப்படி செய்ய தயாராய் இருக்கிறாரா?

  நேரில் வந்து அழைக்கவில்லை , அதனால் போகவில்லை வேறு எத்தனையோ  திருமணங்களைப் பற்றி சுகிசிவம் கேள்விப்பட்டிருப்பாரே, அந் நிலை தமிழ்நாட்டில் இருக்க இவரது நண்பரா காரணம்? தமிழ் நாட்டில் இருக்கும் எத்தனையோ நடைமுறைகளில் இதுவும் ஒன்று.அதற்கு சுகி சிவத்தின் நண்பர் என்ன செய்வார்? அவர் வெறுமனே அதை பின்பற்றுகிறார் அவ்வளவுதான். அதைவிட
சுகி சிவத்தை தனது திருமணத்தில் நிச்சயமாய் பார்த்துவிடவேண்டும் என்று உறுதி படுத்தி கொள்கிறார்.
 
  சந்தோஷத்தை தொலைத்த மனித வாழ்வில், இது மாதிரியான சந்தர்ப்பங்களில் மனிதன் தனது இனபத்தை சக மனிதனிடம் பகிர்ந்துகொள்கிறான். அதை பெரிது படுத்த மிகவும் விழைகிறான். உங்கள் நண்பரைக் கேட்டுப் பாருங்கள் , அவர் தனது 6 மணிநேரப் பயணம்
தொல்லையானது என்றோ , அலுப்பூட்டியது என்றோ யாரிடமும் சொல்லமாட்டார். மாறாக உங்களை சந்தித்த சந்தோஷத்தை
எண்ணிக்கொண்டு தனது அலுப்பை மறந்திருப்பார். அது ஒருவகையில் அவரே அவருக்கு தெரியாமல் உங்களுக்கு செய்யும் தியாகம்.
அவருக்கு நேரவிரய உபதேசம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. உங்கள் நண்பருடன் உங்களுடைய நட்பு அப்படியில்லை எனினும் எனக்கு இருக்கிறது அது போன்ற ஏகப்பட்ட நட்பு.


   இந்த அரைவேக்காட்டின் நண்பர் ஒருவர் சொன்னது. அவரது நண்பர் தனக்கு ஏன் அழைப்பிதழ் வைக்கவில்லை என்று கேட்டாரம்,
அதுக்கு அந்த அரைவேக்காடு, "தீபாவளி , பொங்கல் எல்லாம் சொல்லிவிட்டா கொண்டாடுகிறோம்? " என்று பதில் சொன்னதாம்.
அதை இந்த அரைவேக்காடு சுகி சிவம், "எத்தனை உயர்ந்த சிந்தனை என்று பாரட்டியது"?
நீங்களே  உங்கள் வசதிப் போல திட்டிக்கொள்ளுங்கள்.அந்த நண்பர் நடத்திய திருமணத்துக்கு வேறு யாருமே வரவில்லையா? அய்யர் கூடவா? சுகிசிவம் போனாரா இல்லையா? :-)
  


  இனிமேல் யாரும் நேரில் சென்று அழைப்பிதழ் வைக்காமல் , நேரத்தை விரயம் செய்யாமல் உழைத்தால் இருந்தால், இந்தியா 2020-ல் வல்லரசாகிவிடும் என்று ஒரு முடிவான அறிவுரை வேறு.   யோவ் வருதுய்யா வாயில அசிங்கமாய்!
நீ இனிமேல் சன் நேயர்களின் நேரத்தை விரயம் செய்யாமல் இருந்தால் கூட இந்தியா 2020 -ல் வல்லரசாய் ஆகிவிடும்தான், வேலையை விட்டு போய்விடுகிறாயா?


---------
  இந்த அரைவேக்காடு, இன்னொரு அரைவேக்காட்டை வேறு புகழ்கிறது. எதோ திருக்குறள் முனுசாமியாம் அதன் பெயர்.
எங்கோ இரண்டும் ஒரு இடத்தில் பேச்சாற்ற போயிருந்ததாம். ஞாயிற்றுக் கிழமையாம், நள்ளிரவு 12 மணிக்கு கூட்டம் அதிகமிருந்ததாம்.
இந்த அரைவேக்காடு அந்த அரைவேக்காட்டைப் பார்த்து "ஏன் கூட்டம்?" என்று கேட்க, அந்த அரைவேக்காடு "எல்லாம் அன்எம்ப்ளாயிடு"அல்லது "வேலை வெட்டியத்தவனுங்க நாளை மறுநாள் வேலை போகவேண்டும் என்ற எண்ணமோ அவசியமோ இல்லாதவர்கள்" என்று பதில் சொல்லியதாம்.

  எத்தனை கொழுப்பு பாருங்கள்? இவர்களை மதித்து இலக்கிய கூட்டம் கேட்க வருபவர்களை இதுகள் மதிக்கும் லட்சணம்.
ஒருவேளை இதுகள் பேச்சைக் கேட்பது எத்தனை முட்டாள்தனம் என்று இதுகளே சொல்லுதுகள் போல. :-)

   தனது பேச்சைக் கேட்க வந்திருப்பவர்களின் உணர்வைக் கூட புரிந்து கொள்ளமுடியாத ஜென்மங்கள் , திருக்குறளுக்கு விளக்கம் வேறு செய்கிறதுகள்.  திருக்குறள் முனுசாமி தனது பெயரை திருக்குறள் முட்டாள்சாமி என்று வைத்துக் கொண்டால் மிகப் பொருத்தமாய் இருக்கும்.அதை கேட்க தமிழகத்தில் ஆட்களும் உள்ளது. இந்த மாதிரி அரைவேக்காடுகள் பேசுவதை சன் தொலைக்காட்சி தவிர்த்தால் மக்கள் அதிக பயன் பெறுவர்.

--
யாராவது சுகி சிவத்தின் அஞ்சல் முகவரி தந்தால் இப்பதிவை அவருக்கு சமர்ப்பணமாய் அனுப்பி வைப்பேன்.


Posted at 10:00 am by karthikramas
Comments (12)  

Previous Page Next Page