<< March 2007 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31


If you want to be updated on this weblog Enter your email here:


rss feed

Saturday, October 11, 2003
தோற்று போய்கொண்டே இருக்கிறேன்

நானும் எதாவது எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைத்து..தோற்று போய்கொண்டே இருக்கிறேன்...
இருப்பினும் ஒரு விடாமுயற்சியோடு மனதிலே கஜினி முகமது வை ஒருமுறை சாஷ்டாஙகமா நமஸ்கரித்துவிட்டு இதோ மறுபடியும்

எழுதுகிறேன்..
என் கணிணியில் எழுதுவது கிட்டத்தட்ட இரண்டு முட்டைகளுக்கு மொட்டை அடிப்பது போல கடினமாக உள்ளது. நான் என்ன செய்ய பாவம்!! (னாந்தான்)...
முதலில் என் சுயசரிதையை எழுதுவது என்று முடிவு செய்தேன்... நண்பர்கள் படித்து விட்டு.. சுறா மீன் மதிரி வாயை பிளந்து சிரித்தார்கள்...
அதில் எதுவும் எனக்கு வருத்த மில்லை..ஏனெனில் நான் எது செய்தாலும் கிண்டல் செய்யும் கோஷ்டி அது...

ஊரில் எல்லோரும் என்னதான் எழுதுகிறார்கள் என்று பார்த்து விட்டு எழுதுவது என்று முடிவு செய்தேன்..

1. செய்திகள் வகையறா மற்றும் அறிவியல்(கொஞசம் என்கிட்ட இல்லாத்து வேற தேவை , இதை படிக்க , அதாங்க "மூளை")
2. ஊரில் நடக்கும் சூடான செய்திகள் (மைக்கை வைத்து அடிப்பது, ஓடாத ரவுடியை 'என்கவுண்டர்' செய்து சுடுவது போன்றவை)
3. சொந்த கதை சோக கதை (வீட்டில் வீட்டுக்காரம்மா பட்டினி போடுவது போன்றவை)
4. சிலவற்றை என்னால் என்ன வகை என்று இனம் கண்டு கொள்ள முடிவதில்லை..
அவற்றை எல்லாம் "புது கவிதை" என்று கற்பனையை பறக்க விட்டுகொண்டே படிக்கிறேன்..

(மேலும் பல வகை இருந்தால் ...கோச்சிகாதீங்க...சீக்கிறத்தில் சேர்க்கிறேன்)
முதலில் இந்த வலைப்பதிவு எழுதுவதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்...
Start
சோதனை (அதாங்க நீங்க என் பதிவை படிக்கிற நிலைமையில இருக்கீங்களே அதுதான்)...ஆங்கிலத்தில்.. I PITY YOU,
WHAT MADE YOU READ MY BLOGS....
End

1. Right click , goto view source, மேலே உள்ள Start லிருந்து..End வரைக்கும் (COPY) காபி செய்து கொள்ளுங்கள். அப்படியே ஒரு notepad ல் போடுங்கள்.
2. Ekalappai (http://www.tamil.net/newtamil/ekalappai_1.html) இறக்கி அதை உஙகள் கணினியில் ஓடவிடுங்கள்.
3. பிறகு ALT + 2 வை தட்டுங்கள். இப்போ நீங்கள் உஙகள் notepad ல் தமிழை பார்க்கலாம் (FOR MORE HELP GOTO

C:PROGRAMFILESEKALAPPAIREADME.TXT)
4. இப்போ போய் ஒரு காபி போட்டு குடிங்கள் ...இல்லை கீழே கொட்டுஙகள்..
மேலே கண்ட Start லிருந்து..End ஐயும் உபயோகித்து , அதற்கு நடுவில் நான் தமிழி எழுத்னால், blogger.com ல் பிரச்சினை எதுவும் இல்லை..
Encoding of your notepad needs to be in ANSI, if you the font Tags.I am still to learn unicode methods.. Any helps appreciated (karthikramas@yahoo.com)கீழ்கண்ட இரண்டு சுட்டிகளும் மிகவும் , உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்(தெரியாதவர்களுக்கு)

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm (எழுத)
http://www.suratha.com/reader.htm (படிக்க)

 


Posted at 02:47 pm by karthikramas
Comments  

Sunday, February 09, 2003
Start

என்னை பற்றி நிறைய சொல்வதற்கு ஒன்றும் இல்லைதான்..இருந்தாலும்..எதாவது சொல்வது எனபது இதை படிப்பவர்களுக்கு எதோ பெரிய தொண்டு செய்வதாக என்க்கு பட்டது ஒரு..ஊரில..ஒரு.ம்ம் புரிகிறது புரிகிறது அடிக்க வராதீர்கள்..இதோ உன்மையாகவே என்னை பற்றி..
பெயர் கார்த்திகேயன்..வயது..எப்பயோ கல்யாணம் ஆகியிருக்க வேண்டிய வயது..இதை எனக்காக சொல்லவில்லை..என் அப்பாவிற்கு பேரன் பேத்தி இருக்க வேண்டிய வயதாகி விட்டதல்லவா, அதனால் தான் சொன்னேன். அவரை கேட்டாலோ அதுதான் விஜயா அக்காவுக்கு 2 பிள்ளைகலும்..பிரேமா அக்காவுக்கு 2 பிள்ளைகலும் , மேலும் இந்த
தீபாவளி ரிலீசாக மீனா அக்காவுக்கு ஒன்றுமாக 5 பேர் இருப்பது போதாதா? என்று.. இருப்பதை வச்சி சந்தோஷ பட்டுகொள்கிறார்.

Posted by: karthikeyan / 7:34 PM


Posted at 10:17 pm by karthikramas
Comments  

Wednesday, January 01, 2003
ஒவ்வொரு கணத்திலும்

ஒவ்வொரு முகத்திலும்
ஒவ்வொரு கணத்திலும்
மகிழ்ச்சியே காண விழைகிறேன்..
உழைத்திடுவேன்...உண்மையாய்
அதை ஆக்கிடவும்...

மனிதர்கள் சதா கவலைகளில் மூழ்கிவிடுவது எனக்கு..எங்கோ ஏதோ செய்வது போல உறுத்தும்..
அது போன்ற் ஒரு கணத்தில் தோன்றியதுதான் இது.. இதன் சாத்தியமுடைமை ஒவ்வொருவரையும் பொறுத்தது..
என்னை பொறுத்தவரை இது மிக சாத்தியமான விஷயம்.

----
நமது தமிழ் சமுதாயத்தில், மறுமணம் இன்னும் பெரும்பாலும், ஒரு தூரத்து விஷயமாகவே உள்ளது,மிகவும் வேதனைக்குறிய விஷயம்.
எனது உறவினர்களில் ஒருவர் சமீபத்தில் கணவனை இழந்தார். நான் சென்றமுறை இந்தியா செல்வதற்கு சில நாட்களுக்கு முன் தான் இது நடந்தது. அந்த பெண்மணிக்கோ இன்னும் 30 வயதுக்கு மேல் ஆகியிருக்காது.நான் எனது தந்தையிடம் இது பற்றி பேசியது இதுதான். அந்த பெண்மணியை எங்காவது வேலைக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள் அப்பா, என்றேன். அது அவருக்கு கவலையை மறக்கவும், மனதுக்கு மாற்றமாகவும் இருக்கும் என்றேன்.அப்படியே கூடிய விரைவில் ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். அது ஒரு வருடமாகவோ அல்லது இன்னும் கொஞ்ஜம் நாள் கழித்தோ நடந்தால் சரியாக இருக்கும் என தோண்றுகிறது என்றேன். என் அப்பாவும் சரி என்று கேட்டு கொண்டார். இருந்தாலும் இதை பற்றி உடனே பேசமுடியாது உறவினர்களிடம் என்றார். அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தது எனக்கு.

இது நடந்து சரியாக 2 வருடங்கள் ஆகியிருக்கும். இன்னமும் அந்த பெண்மணிக்கு திருமணம் நடந்த பாடில்லை.மறுமணத்துக்கு தடையாக உள்ள விஷயங்களை நீக்க அரசு உதவமுன்வரவேண்டும்...கணவனை இழந்த பெண்களுக்கு மாற்று அடையாளம், மாற்று இடம், மாற்று வேலை அமைத்து தந்தால் அது அவரது மறுமணத்துக்கு ஏதுவாக இருக்கும். மறுமணத்தை ஆதரித்து தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை தரலாம். இது மெது மெதுவாக நமது கலாச்சாரத்தில் ஊறி , சில காலங்களில் மறு மண எண்ணிக்கைகள் அதிகரிக்க வழிவகுக்கும்..ஒவ்வொரு கணவனும், தனது இறப்புக்கு பின்னும் தனது மனைவி சந்தோசமாய் வாழவே ஆசைப்படுவான்...கணவனை இழந்த இளம்பெண்களுக்காவது கதவுகள் திறந்து வைக்கபடவேண்டும், அவர்களில் ஏற்று கொள்பவர்களுக்காகவாது..


Posted at 03:36 pm by karthikramas
Comments (3)  

Previous Page