<< July 2004 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03
04 05 06 07 08 09 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31


If you want to be updated on this weblog Enter your email here:


rss feed

Monday, July 19, 2004
ஒரு மொழி...

அன்புள்ள நண்பருக்கு,

அரசு அங்கீகாரம் தடைக்கல் என்று நான் சொல்லவில்லை. ஒரு மொழி
செம்மொழி என்று ஏற்றுக்கொள்ள அரசு அங்கீகாரம் தேவையில்லை. இது மொழி அறிஞர்கள்ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்து.தமிழ் கூறும் உலகப் பல்கலைக்கழகங்கள் தமிழைச் செம்மொழியாக என்றோஏற்றுக் கொண்டுவிட்டன. அரசு அங்கீகாரதுக்காகப் போராடினோம் என்பது அரசியல்.அரசுஅங்கீகாரத்துக்குஅர்த்தமேயில்லை என்கிறபோது எதற்குப் போராட்டம்? ஒரு non-issueக்குப்போராடவேண்டியஅவசியமென்ன என்பதுதான் என் கேள்வி. இப்பொழுது சமர்ப்பிக்கிப்பட்டுள்ளபட்ஜெட்டில்தமிழ் செம்மொழி என்பதைச் செயல்படுத்த ஏதேனும் நிதி ஒதுக்கீடு
அறிவிக்கப்பட்டுள்ளதா?இல்லை. இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டுஅதைக் கற்பிக்கவும், ஆய்வு செய்யவும், பட்ஜெட்டில் இடம்பெறாமல், நிதிஎங்கிருந்து வரும்?வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதுவரக நூல்நிலையங்களில் ஆங்கில, ஹிந்திப்
புத்தகங்கள்மட்டுந்தாம் இருக்கின்றனவேதவிர, சம்ஸ்கிருதத்துக்கு இணையான தொன்மையடையதமிழ்செவ்வியல் நூல்கள் கூட இடம் பெறவில்லை. தமிழ் மீது ஆணையிட்டுஅரியணையேறியஅரசியல் கட்சிகள் இதுவரை இது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? இது பற்றிநான் தினமணியில்ஒரு கட்டுரை 1988ல் எழுதியிருக்கிறேன். அரசியல் கட்சிகள்இப்பிரச்னையைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.இது போன்ற இன்னும் தமிழ் அரசியல் கட்சிகள்தமிழுக்காகஎழுப்பவேண்டிய பல பிரச்னைகள் உள்ளன. எல்லவற்றையும் விட்டுவிட்டு ஒரு non-issueக்காகப்போராடி அது ஒரு சாதனையாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான்
என் கருத்து.

இந்திரா பார்த்தசாரதி

----- Original Message -----
From: karthikramas <karthikramas@y...>
To: <RaayarKaapiKlub@yahoogroups.com>

 ஆக
 வேண்டிய காரியங்களுக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்துவிடுமோ
 என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது

1. நண்பருக்கு, வார்த்தைகளை எடுத்துக் கொடுத்துக்கு நன்றி. முதலி
 லிருந்தே இதைத்தான் நான் கேட்கிறேன். அரசியலை விடுத்து,
 இந்த அங்கீகாரம் எப்படி 'தடைக்கல்லாய்' இருக்க முடியும் என்று
 யாராவது சொல்லுங்கள். உங்கள் கருத்தில் நியாயம் இருந்தால்
 மனபூர்வமாய் ஏற்றுக் கொள்கிறேன்.
 நிஜமாய், எனக்குத்தான் புரியவில்லை இல்லை எல்லோரும் நடிக்கி
 றார்களா என்று அச்சம் ஏற்படுகிறது. இ.பா. வாவது என் அறிவுக்
 கண்ணைத் திறந்தால் தேவலை!
 :-))

 2. வணிக ரீதியில் தமிழ் முன்னேறுவத்ற்கு என்ன செய்ய
 வேண்டும்? டப்பு வேணுமே? யார் தருவார்கள்?
 :))


Posted at 12:22 pm by karthikramas
Comments  

Friday, July 16, 2004
அம்மா எங்கே! சாக்லெட் எங்கே!...

காலையில் அம்மாவின் பால சாதமும்
அதை ஊட்டுகையில் அவளது விரல் சுவையும்
பையில் இடைவேளைசாப்பாடு
கொஞ்சம் தண்ணீர்
ஒரு துண்டு சாக்லெட்

முதல் மணி அடிக்கும் போது
பள்ளிகூரை பற்றிகொள்ளும் என்று
சொல்லவே இல்லையே அம்மா!
மறந்துவிட்டாளா!
அவளுக்கு தெரிந்திருக்கவில்லையோ!
இந்த டீச்சர் எங்கே போனாள்?

அதற்குள் சாப்பிட்டுவிடலாம் இந்த சாக்லெட்டை!
னினைவுகளை எரிக்கும் விதமாய்
சர்ரென பிஞ்சுத் தொடையில் பாய்ந்து துளைக்கும்
எறியும் தீக் கட்டை
சாக்லெட்டு உருகிவிடுமோ!
கண் ஏன் சொக்குது
முடிவில்லாத இருள்!!
அம்மா எங்கே! சாக்லெட் எங்கே!

 

News: The bodies are so badly charred it's difficult to identify the children or their sexes

Posted at 05:11 pm by karthikramas
Comments  

Wednesday, July 14, 2004
நண்பர் தங்கமணியின் பின்னூட்டதிற்காக..

நண்பர் தங்கமணியின் பின்னூட்டதிற்காக , ராயரில் எழுதிய என் இரண்டாம் கடிதம்.

அன்பு கார்த்திக்ராமஸ்,
>
> பொய எழுத்தாளர் என்றாலும் அவருடைய கருத்துக்களை
மறுத்துச் சொல்கிற உங்களின் அந்தத் துணிச்சலை
> பாராட்டுகிறேன். என்றாலும் உங்கள் கருத்துக்களை நயம்பட
சொல்லலாமே... முகத்தில் அறைகிறாற் போன்ற
> வார்த்தைகள் பொய எழுத்தாளருக்கு அல்ல, இன்று புதிதாய்
எழுதத் துவங்குகிற எழுத்தாளருக்கு கூட வேண்டாமே..
>
> இல்லை, அதிர்ச்சியாய் ஏதாவது சொல்லி, அதன் மூலம் மற்றவர்
கவனத்தை கவருகிற உத்தி என்றால் அது
> நீடித்து நிலைக்காது என்று நம்புகிறேன்.
>
> இந்தமாத காலச்சுவடில் இதுபற்றிய வேங்கடாசலபதியின்
கட்டுரையை வாசித்தீர்களா?


அன்புள்ள சுரேஷ்-க்கு,
நன்றி, தமிழுணர்வு கொஞ்சம் தலைக்கேறிவிட்டதுதான் காரணம்
என்று நினைக்கிறேன். இருந்தாலும் இதில் வருத்தப்பட எனக்கேதும்
இல்லை. இதையே இ.பா. அல்லாது வேறு யார் எழுதியிருந்தாலும்
இபபடித்தான் எழுதியிருப்பேன். எழுதுவேன்.
எதிர்வினை எழுதும்போது , கருத்தைச் சொன்னவர் பெரிய
எழுத்தாளரா அல்லது துணுக்கு எழுத்தாளரா, நோபெல் பரிசு வாங்கி
யவரா என்றெல்லாம் பார்த்து எழுதுவதில்லை. கருத்தை மட்டும்தான்
பார்க்கிறேன். அதனால் ஆகப்பெரிய நன்மை என்ன என்று
பார்த்துவிட்டு, சுத்தமாய் பலனற்ற கருத்து என்று பட்டால் 'போட்டுத்
தாக்கு' என்று எழுதுவதுதான்.

இனி விஷயம் பற்றி.
அரசின் எல்லா முடிவுகளிலும் அரசியல் இருக்கத்தான் செய்யும்.
ஏனெனில் அது அரசியல் புழங்கும் இடம். ஆனால் முடிவுகளுக்குபி
ன் ஏது நன்மை உள்ளதா என்று பார்த்தான் எடை போட
வேண்டும்.
தீராநதி போன்ற ஒரு பெரும் வாசகர் வட்டமுடைய இடத்தில்
இது போன்றதொரு கட்டுரை எழுதி எதை முன்னெடுத்துச் செல்ல வி
ழைகிறார் இ.பா. இந்தக்கட்டுரையால் என்ன சிந்தனையைத் தூண்டிவி
டப்போகிறார்?
இந்த அரசின் அங்கீகாரத்தால் ஒரு 10 ரூபாய் தமிழுக்காக கி
டைத்தால் கூட சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளத்தானே
வேண்டும். அதில் இரண்டாம் கருத்து இருக்க முடியுமா? இதில்
எங்கே 'அரசியலும்','Wஇதானமான சிந்தனையும்' முன்னிலைப்படுத்த
வேண்டிய அவசியம் உல்ளது. அரசியலுக்கு அப்பற்பட்ட முடிவான
நன்மையை எழுதுவது அழகா? இல்லை அரசியல் பேசுவது அழகா?
உலக அரங்கில் தமிழைப்பற்றி பிற நாட்டவர் தெரிந்து கொல்ள
இது போன்ற முடிவுகள் டாகுமெண்ட் அளவிலாவது உதவும்.
இன்றைய அளவில், செம்மொழி என கிரேக்கத்தையும்,
லத்தீனையும் பல நாட்டு பலகலை கழகங்களில் படிக்கச் சொல்லி
மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். இதே வரிசையில் , பல வேறு
காரணங்களுக்காகவோ அல்லது மாற்றாகவோ தமிழ் பிற்காலத்தில்
சேரமுடியும். இதற்கு அரசு அளவில் முயற்சி நடந்தால் , அது
போன்ற செயற்பாடுகளுக்கும் இம்முடிவு உதவும். எக்ச்சேண்ஜ்
மாணவர்கள் எனப்படும் இணைமாற்று முறைப்படி, இந்தியாவந்து தமி
ழைக கற்றவும் அதற்கு நிதி உதவி அளிக்கவும் இது உதவலாம்.
இது நேரடியாக உதவில்லை என்றாலும் கூட மறைமுகமாக் பல வி
தங்களில் உதவும் சாத்தியகூறுகள் உள்ளன.
நேரடியாகவே கேட்கிறேன். பணம் சம்பாதிக்க மட்டும் தான் தமி
ழும் தமிழுணர்வுமா? பிற எதற்கும் தமிழுணர்வு தேவைஇல்லையா?
எழுத்தாளர் எவரைக்கேட்டாலும், தமிழில் இத்தனை நாவல்கள்,
தமிழ் கட்டுரைகள் இத்தனை, தமிழ் விருதுகள் இத்தனை
என்றுதானே மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இதில் உள்ள
நன்மையை இனம் காணமுடியவில்லையா? ஆச்சரியம் அல்லது
வெட்கக கேடு!! மேற்சொன்ன எதற்காவது இது மிகச் சிறிய காரணி
யாக இருந்தாலும் இது வரவேற்கப்படவேண்டியதே!
நான் எதிர் வினை எழுதுவதால் இ.பா.வின் புகழ் மங்கிவிடப்
போவதுமில்லை. அவர் பெரிய எழுத்தாளர் என்பது மாறிவிடப்
போவதுமில்லை. பெரிய எழுத்தாளர்களிடம் கொஞ்சம் அதிகமான
ஜீரண சக்தியை எதிர்பார்ப்பது முறை என்றே நினைக்கிறேன்.
என் கேள்விகளையே பாரதியோ , பாரதிதாசனோ
கேட்டிருந்தால்தான் ஒத்துகொள்வீர்களா?:) அப்படியே அவர்கள்
கேட்டிருந்தாலும் என்ன பதில் சொல்வீர்கள்/வார்கள்.

நகைச்ச்சுவை:
ராயர் காப்பி கிளப்பில் கவனத்தை ஈர்த்து நான் என்ன அய்யா
சாதிக்கப்போகிகிறேன். :-) இந்தக் குறும்புதானே வேண்டாம் -ங்கி
றது.

---
காலச்சுவடு கட்டுரையை வாசிப்பேன்,தகவலுக்கு நன்றி.

Karthikramas


Posted at 12:41 pm by karthikramas
Comments (1)  

Friday, July 09, 2004
அங்கீகாரமும் தகுதியும்...

அங்கீகாரமும் தகுதியும்

   இ.பா. இந்தக் கட்டுரையால்  என்ன சொல்ல வருகிறார் என்று யாருக்காவது புரிந்தால் தயவு செய்து விளக்குங்கள்.

1. செம்மொழி என்றால் அது இறந்த  மொழியாய் இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறாரா?
   இப்படி இல்லாத ஒரு தகுதியைஇருக்கவேண்டும் என்று மனித வளத்துறைக்கு இவரே பரிந்துரைதாலும் ஆச்சரியமில்லை.

2. அங்கீகாரம் என்றால் என்ன எனபது அவருக்கு புரியவில்லையா?

3, செம்மொழி அங்கீகாரத்தினால் என்ன நட்டம் வந்துவிடும் என்று சொல்லமுடியுமா அவரால்?
    அங்கீகாரம் என்பது என்ன? ஒரு எழுத்தாளர் அவார்டு வாங்குவது கூட அங்கீகாரம் தானே. பரிசுத்தொகை வாங்குவது கூட அங்கீகாரம் தானே. இது போன்ற அங்கீகாரங்கள் தீமைகளைத் தராத போது போது, எப்படி தமிழ் செம்மொழி என்ற அரசின் அங்கீகாரம் மட்டும்  நட்டத்தைத்தரும்.
கேட்பவன் கியானையன் என்றால் கேழ்வரகில் கூட நெய் வடியத்தான் செய்யுமோ.
   உதாரணமாய், ஒரு மாலய் மொழியையோ, அல்லது ஸ்பானிய மொழியையோ அதன் அல்லது அது போன்ற பன்மொழி நாடிடில் ஒரு 2000 வருட காலம் வாழ் மொழியை அவ்வரசு செம்மொழி 'அந்தஸ்து' தருவதாய் அறிவித்தால் கூட அதை வரவேற்போம். ஆனால் தமிழை அங்கீகரித்தால்தான் நிதானமாய் யோசிப்போம். இதுகூட  தமிழ் மீது உள்ள காதலால் அல்லது உரிமையால்தான் போல.
  

4. உணர்வுவசப்படவேண்டாம், நிதானமாக யோசிக்க வேண்டும் என்று சொல்கிறாரா?
   உணர்ச்சிவசப்படாமல் ஆராயவேண்டும் என்று சொல்வதற்கும் ,ஒரு அநாகரிகம் தேவை. தமிழை தாயென்று பாடியவனுக்கு அறிவில்லை என்று சொல்கிறாரா?  மொழியும்பண்பாடும் எப்படி இணைந்துள்ளது எனபதை விட மொழியும் அதன் வளர்ச்சிக்கான பணத்தேவையும் எப்படி இணைதுள்ளது எனபதை அறியவில்லையா இவர்.

இ.பா.வின் இந்தக் கட்டுரை உடைப்பில் போடக் கூட லாயக்கற்றது.

இது தொடர்பாக மூக்கரின் பதிவு இங்கே(07/07/2004).

Posted at 12:36 pm by karthikramas
Comments (5)  

10 சென்ட்டுகளுக்கு அமெரிக்காவிலிருந்து இ

என் போன பதிவில் 12 சென்ட்டுகளுக்கு இந்தியாவுக்கு தொலைபேசுவது எப்படி எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த விஷயம் எப்படியோ கசிந்து போட்டியாளரான வீடீடெலிகாமின் காதுகளுக்கு சென்றிருக்கும் என் நம்புகிறேன். எனவே மறு நாளே வீடிடெலிகாமின் விலை சரசரவென சரிந்து 10 சென்ட்டுகளுக்கு அமெரிக்காவிலிருந்து  இந்தியாவுக்கு பேச முடியும் என அறிவித்தது. அதன் தலைவழுக்கையான தலைவர் ஒருவர் எனக்கு அனுப்பிய பிரத்யேக கடிதத்தில் பின் வருமாறு எழுதியுள்ளார்.
  " அன்புள்ள கார்த்திகேயனுக்கு,
 உங்கள் அடங்காத ஆசையினால் நீங்கள் இந்தியாவுக்கு தொலைபேசி உங்கள் சொத்து எல்லாவற்றையும் இழக்கவேண்டாம் , இனி நிமிடத்துக்கு 10 சென்ட்டுகள் செலவிலேயே இந்தியாவுக்கு தொலை பேசுங்கள்.
  உங்கள் நாள் நன்றாய் இருக்க வேண்டும்.
இப்படிக்கு,வீடீ டெலிகாம் (தலை வழுக்கையான தலைவர்)
பி.கு. இந்த கடிதத்தின் உண்மையான வடிவத்தை எல்லோருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஏன்னு
கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. :)

Posted at 10:13 am by karthikramas
Comments (1)  

Tuesday, July 06, 2004
12 சென்ட் -களில் இந்தியாவுக்கு பேச.

  அண்மையில் நண்பர் ஒருவர் சொன்னது. ரிலையன்ஸ் இந்தியா கால் என்கிற ரிலையன்ஸின் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து இந்தியா பேச குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.இதை வாங்கி உபயோகித்துப் பார்த்தேன். ஓரளவு நன்றாய் உள்ளது. நிமிடத்துக்கு 12 சென்ட்டுகள். இந்தியாவின் எந்த ஊர்களுக்கு பேசுவதானாலும் இதே விலைதான்.

இதற்கு முன் வீடீடெலிகாம் என்கிற தொலைபேசி கார்டுகளை உபயோகித்துக் கொண்டிருந்தேன். அதன் விலையோ நிமிடத்துக்கு 21 சென்டுகள் எனவே பாதி விலையில் இந்தியாவுக்கு தொலை பேசுவதில் ஆனந்தம்தான். அந்த ஆனந்தம் உங்களுக்கும் கிட்டட்டும். :)

இதன் தள முகவரி:https://www.relianceindiacall.com


Posted at 05:18 pm by karthikramas
Comments (1)  

சத்ய சாய் பாபா பற்றிய செய்தி ஒலிப்பதிவு...

1. சத்ய சாய் பாபா பற்றிய செய்தி ஒலிப்பதிவு மற்றும் கட்டுரை.
===========================================================
  சில நாட்கள் முன் நண்பர் பாஸ்டன் பாலாஜி, சாயி பாபா பற்றி பேச்சு எழுகையில் எனது கருத்துகளை கேட்டிருந்தார். இந்த பதிவுக்கும் அதற்கும் எவ்விததொடர்பும் இல்லை.இது ஒரு மேலதிக விவரமே. பெரும்பாலான சாயி பக்தர்களுக்கு இவை(போன்ற செய்திகள்) பழகிப்போனவையாக இருக்க வாய்ப்புள்ளது.

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040621_saibaba.shtml

ஒலிப்பதிவு ரியல் ப்ளேயரில் இயங்குவது.

நண்பர் ராஜா(நாமக்கல்), அவரது பதிவிலும் இது குறித்து எழுதியுள்ளார். அவரது பதிவி,பின்னூட்டங்களின் முகவரி இது.

 2.தமிழ் செம்மொழியாதல் குறித்த அறிஞர்கள் கருத்து.
==================================================
 கிறிஸ்துவுக்கு முந்நூறுகள் ஆண்டுகள் முன்பிருந்தே தமிழிலக்கியம் எழுதப்பட்டு வருவகிறது என்று அண்மைய ஆராய்ச்சிகள் காட்டுவதாக கூறும் அவர், சமஸ்கிரதம் மற்றும் அதுசார்ந்த மதநிலை பாரம்பரிய இலக்கியங்களுக்கு நிகராக, தமிழ் திராவிட இலக்கியமும் பண்பாடும் இந்திய பாரம்பரியத்தின் கூறு என்பதை ஏற்கும் அறிவிப்பு இது என்று தெரிவிக்கிறார்.

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/06/040610_tamil_classical.shtml

ஒலிப்பதிவு ரியல் ப்ளேயரில் இயங்குவது.


Posted at 12:43 am by karthikramas
Comments  

Friday, July 02, 2004
1. எரித எரிச்சல். 2 பாபா வெர்சஸ் பாபா குழப்பம்


1.இந்த எரிதம் பற்றி படித்தேன்.
===================================

2 விஷயங்கள்.

1. இந்த மின்ஞ்சல் முகவரி சேகரிப்பவர்/சேகரிப்போர் தமிழார்வத்தினால் செய்வாராயின் அதை எதற்கு முகமூடியாய் செய்ய வேண்டும்? ' நேசமுடன்' வெஙக்டேஷ் செய்தது போல வெளிப்படையாக செய்யலாமே?
" ஐயா, என் பெயர் மின்னஞ்சல்மினுக்கனுங்க". நான் இந்த இதழையோ, அல்லது இந்த தமிழ் விஷ்யத்துக்காகவோ கேக்குறனுங்க. விருப்பப்பட்டவங்க இந்த பட்டியலில் சேருங்க என்று சொல்லலாமே? ஏன் செய்யவில்லை. இந்த முகமூடி நமது அஞ்சல் முகவ்ரியை வாங்கிக்கொண்டு நாளை என்ன செய்யும் என்று யாருக்குத் தெரியும். இந்த நம்பகத்தன்மை குறைவாக இருக்கும் செயல்பாடுகளினால் யாருக்கும் ஆர்வம் குறையவே செய்யும். இதைக் கூட அந்த முகமூடியரிடம் நான் கேட்கமுடியாது. ஒரு நட்புடன் அவர் அனைவரின் மின்னஞசல்களையும் கேட்பதால், அதே நட்புடன் இப்படிக் அவருக்கு வேண்டுகோள் வைக்கலாம். "என்னங்க நாளைக்கு எதேனும் பிரச்சினையானவர்களிடம் என் மின்னஞ்சல் முகவரியை அனுப்பிட மாட்டீங்களே? " என்று.

2. நண்பர் முகுந்த் சொல்வது போல் நமது மின் முகவரிகளைக் கொண்டு அவர்கள் பெரிதாய்  செய்துவிடப் போவதில்லை என்பது ஒரு புறம் உண்மையானாலும், மறுபுறம் , ஒவ்வொரு நாளும் வருகிற எரிதங்களைப் பார்த்து எரிச்சல் பட்டு அழித்துக் கொண்டிருக்க யாருக்கும் பிடிக்காது என்பதே உண்மை. மேலும் 6 எம்பி யாகூ மின் தபால்பெட்டியில் தினமும் பல மற்ற முக்க்கிய மின்னஞ்சல்களை திடீரென ஒரு நாள் இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு நாமே ஏன் வாஇ செய்துகொள்ள்வேண்டும். ஹாட்மெயில் உபயோகிப்பவர்களின் நிலைமை அனைவருக்கும் தெரிந்ததே. மதி போல ஒரு 100 வலைப்பதிவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் எந்த தமிழக் கடிதம் எரிதம் என்று தெரியாமல் நல்ல கடிதங்களுடன் குழப்பிக் கொள்ளவும் வாய்ய்பு ஏற்படலாம்.

இலக்கிய ஆர்வமுடைய ஒருவர் கேட்டால் சேர விருப்பமுடையவர்கள் கொடுக்கப் போகிறார்கள். அல்லது "ஸ்பாம்மிங்" என்கிற எரிதம் எறியும் வியாபாராமாய் முயன்றால் எவ்வறெல்லாம் தடுக்க முடியுமோ அவ்வாறெல்லாம் தடுப்பார்கள் என்பதே நடைமுறை. நிற்க.

2.பாபா வெர்சஸ் பாபா குழப்பம்.

================
சமீபத்தில் ஒரு குழப்பம் தீர்ந்தது. இந்த குழப்பத்தினால் உண்டான உபகுழப்பங்களும் தீர்ந்தன.
அந்த பெரிய குழப்பமானது இதுதான். வலைப்பதிவர் பாலாஜி-பாரி என்பவரும் பாஸ்டன் பாலாஜி என்பவரும் வேறு வேறானவர்கள். வலைப்பூவில் சொன்ன புண்ணியவான் நல்லா இருக்கட்டும் சாமீ.

எப்படியோ இவர்கள் இருவரும் ஒருவரே என்று மூளைக்குள் போய்விட்டது. அதிலிருந்து இன்றுவறை. எத்தனை குழப்பம். என்னடா பாஸ்டன் பாலாஜி பாஸ்டனுக்கும் பெங்களூருக்கும் மாதம் 2,3 முறை பறக்கிறவர் போல என்று ஒரு உபகுழப்பம். அதுதான் பாஸ்டனாரின் இன்றையப் பதிவுக்கு மறு மொழி எழுதிவிட்டோமே. அத்ற்குள் உறுமி மேளத்தில் இன்னொரு பதிவு எழுதியுள்ளாரே? இதை அப்பறம் படிக்கலாம்.
  என்ன மனுஷன்டா இவர்? நம்மை பாஸ்டன் வர்ச் சொல்லிட்டு இவர் பாட்டுக்கு திடீர்னு பெங்களூர் போயிடுவாரோ என்று இன்னொரு பயம். கஞ்சி குடித்துக் களியாட்டம் போட்ட பாமரன், பாஸ்டனாரா இல்லை பெங்களூர் வாசியா என்பது இன்னொன்னு. வெள்ளிக்கிழமை மாலை 4 மணி கிழக்கு கடற்கரை நேரப்படி கஞ்சி குடிப்பவர் பாஸ்டனார்தான் என்று தெளிய வேண்டியுள்லது. போதாகுறைக்கு இவரும் பாபா அவரும் பாபா.
இப்போ இன்னொரு சந்தேகம் , அப்படீன்னா தங்கமணி யேல் பல்கலையில் இல்லையா? ஐய்யோ சாமீ ஆள விடுங்க. :)))


Posted at 04:33 pm by karthikramas
Comments (3)  

Saturday, June 26, 2004
மானே, தேனே, பெருமதிப்புக்குரியவர்களே..

அனமிகா மெய்யப்பன்,
 செல்வராஜ் என் பின்னூட்டத்தில்  சொன்னபிறகே சோடாபாட்டில் அவர்கள்   இது பற்றி கருத்து சொல்லியிருப்பது தெரிந்தது. என் வார்த்தைப் பிரயோகம் குறித்து நீங்கள்  சொல்வதை ஏற்கிறேன். இருந்தாலும் இதைச் சொல்ல விழைகிறேன். ஒரு சமூகப் பெரியவர் அது எந்தச் சமூகப் பெரியவர் எழுதியிருந்தலும் இப்படித்தான் எழுதுவேன். அதிலும் ஒரு சமூகப் பெரியவரின் பேச்சு  அவரைப் பின்பற்றுவர்களின் வாழ்க்கை நடமுறைகளில் பாதிப்பு உண்டாக்கும் பதவியிலோ அல்லது நிறுவனத்திலோ இருக்கும் போது, எனக்கு இன்னும் அதிகமாய் அசிங்கமாய்த்தான் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.இது போன்று தாக்கம் ஏற்படுத்துபவர்களின் அறிவு சாமானியர்களைவிட அதிகமாயும், உயர்ந்த கருத்துடவராயும், இருத்தல் அவசியம். குறைந்தபட்சம் சமானியர்களைப்போலாவது அவதூறான கருத்துக்களைச் சொல்லாதிருத்தல் நலம். 'அன்பே', 'மானே' தேனே,'பெருமதிப்புக்குரியவர்களே' என்று எழுதிக்கொண்டு விஷத்தை விட அபாயகரமான கருத்துகளைச் சொல்வதைவிட எனக்கு என் போல் எழுதுவர்களின் மேல் தான் மதிப்பு அதிகம் வருகிறது.

1. இந்த பீடத்தில் இருக்கும் பெரியவருக்கும் இந்தக் கருத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை யென்பது எப்படி சரியான வாதமாகும். இப்படி கருத்தை வெளியிட்டால் அதைத் திருத்துவதில் அவருக்கு கடமையில்லையா?
2. ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால்கூட, அவர் வேசி என்று சொலவ்தற்கும், நான் தேவடியாள்பையா என்று சொலவதற்கும்  என்ன வித்தியாசம் என்று கேட்கத் தோன்றுவதில் இருக்கும் நியாயம் உங்களுக்கு புலப்படும் என நம்புகிறேன். ஒரே பொருளுள்ள ஒரு வார்த்தை உயர்ந்தாகவும் , அதே போன்ற இன்னொரு வார்த்தை கசப்பாகவும் இருப்பதன் பின்னணியில் உள்ள சமூகச் சிக்கலைக் கொஞ்சம் யோசித்துதான் பார்ப்போமே!. அதே வஞசகமும் சூதும் தான் முழு உருவம் பெற்று பிரினையையும் , மக்களை முட்டாளாக்கவும் ஆக்கியுள்ளது அகலக் கண் கொண்டுப் பார்த்தால் தெரியும். இது போன்றேதான்  உயர்குடி வார்த்தைகள் என்று கீழ்க்குடி வார்த்தைகள் என்று பிரிந்து நிலவுவதை சொல்ல முடியும். உதாரணமாய், சோறு,கஞசி, துன்னு போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே நமக்கு அறுவருப்பு கூட வரலாம். அது நமது தவறல்ல. நாம் உயர்குடி வார்த்தைகளை நம்மை அறியாமலே விரும்புகிறோம் என்பதன் விளைவாக, இதன் காரணம் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. உண்மையை ஆராய்ந்து பார்த்தோமெனில் இவை வெறும் திரிபு மாயைகளே
என்பது விளங்கும்.

3. இப்படி ஒரு (மட)மடத்துக்கு  என்னைப்போல்  ஒரு இணைய எதிரி இருந்து விட்டுத்தான் போகட்டுமே. அதனால் அம்மடத்தின் புனிதம் பாதிக்கப்படாது என்றே உறுதியாக நம்புகிறேன்.எதேனும் சாபம் கீபம் கிடைத்தாலும் சிரமேற்கொண்டு செயலாற்ற ஆவல் சித்தமாய் உள்ளேன்.

4. இது போன்றவர்களுக்கு இருக்கும் எதிர்ப்ப்பை  விரல் விட்டு எண்ணிவிடலாம். இத்தனைபேர்தான் என்று. கொஞசம் கடுகை அதிகமாய்ப் போட்டுத்தாளிப்பதை கடமையாகவே கருதுகிறேன்.

5 ஒரு பெரிய மகான் அல்லது அவரைச்சேர்ந்த கூட்டம் (என்றே வைத்துக் கொள்வோம்) , 'உன் மனைவி வேசி போல் இருக்கக் கூடியவள் என்று ' சொன்ன்னால் கூட , அவரை விடுத்து , அக்கூட்டத்தை விடுத்து ,  மறு எதிர்ப்பாய், சாதரண குடியானவனுக்கு வரு கோபம் போல் எதிர்துள்ள என்னைப் போன்றவர்களின் வார்த்தை மேல் வரும் கோபமும்,அவர் மேல் வரும் பச்சாதாபமும், உங்களைப்  (உதாரணத்துக்கு மட்டுமே சொல்கிறேன் கோபிக்க வேண்டாம் , கருத்தளவிலே யோசிக்கவும்) போன்றவர்களின் நேர்மையையும், அல்லது மூடத்தனமான பக்தியையும் எந்த மனமும் சந்தேகமேப் படும் என்பதைச் சொல்லும் கடமையும் எனக்குளது.
(எதையும் பெர்சனலாக எடுக்கவேண்டாம் என்று தாழமையுடன் வேண்டிக் கொள்கிறேன்).உங்கள் பக்கம் நேர்மையாக ஏதும் கருத்திருப்பின் தயங்காமல் எனக்கு மறுப்பு எழுதுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.


அன்புடன்,
கார்த்திக்


Posted at 01:54 am by karthikramas
Comments (25)  

Thursday, June 24, 2004
என் குடும்ப போட்டா.. :p

வாசன் வலைப்பூவில், ஒரு நாய் குடும்பத்தைப் பற்றிஎழுதி, போட்டா போட்டதும் எனக்கும் என் குடும்ப போட்டா (?) போட ஆசை வந்துவிட்டது.என்ன்னுடைய படங்களையும் என் குடும்ப படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
angrylion

1.இது நான் போட்டா ஸ்டுயோவில் அழகாக போஸ் கொடுத்து எடுத்தது. படத்திலிருப்பது நான் தான். ஆறறிவுள்ள (அ)சிங்கம். இன் இங்கிலீஷ், சிக்ஸ்த் சென்ஸ்டு சிங்கம். :)
baduy

2. இது ஹாலோவீன் பண்டிகையின் போது அணிந்தது. பட்டப் பெயர் சங்கிலிக் கருப்பன்.
childhood
3.இது நான் 2 வயதில் இருக்கும் போது எடுத்த படம். அப்போது எனக்கு 2 பற்கள்தான் இருந்தது. ஹொவ் கியூட் :)
dady shouts

4. இது என் மதிப்புக்குரிய தந்தை. ஒரு முறை காலேஜ் கட் செய்துவிட்டு சினிமா பாக்கப் போனபோது திட்டினார். அப்போது எடுத்தது. அவருக்குத் தெரியாது.
drawing

5.இது என் அக்காப் பையன் ஸ்கூல் ஒவியப் போட்டிக்கு வரைந்தது. மனிதனை வரைந்த இன்னொரு குழந்தைக்கு போனது ம்தற்ப் பறிசு :-(. இவனுக்கு 2 ம் பரிசு.

Family
6.இது நானும் என் அப்பாவும் தஞ்சாவூர் போயிருந்தபோது எடுத்தது.

family3

7.இது அப்பா ,பெரியப்பா மற்றும் நான். போர்ட்ரைட் செய்தது. வீட்டு ஹாலில் மாட்டியிருப்பது.
family3.realjpg

8.இது அப்பா, அம்மா மற்றும் நான். ஒரு ஞாயிற்றுக் கிழமை அருகில் இருக்கும் பார்க் போனபோது எடுத்தது.
father_works

9.அப்பா வேலையிடத்தில் எடுத்தது. இரைக்காக கால் கடுக்க காத்திருக்கிறார். பாவம்.
grandpa

10.இது எங்கள் ஊரை ஆண்ட இன்கிலாந்தையர்களில் ஒருவர். அவரது இந்த சிலை இருக்கும் இடம் இங்கிலாந்து.
malaivaazLion

11. எங்கள் சமூகத்தில் சிலர் மலைவாழ் பழங்குடிகள். ஆனால் அவர்களுக்கும், பாரம்பரிய கலாச்சாரம் உண்டு. 'மலை வாழ்'னு சொன்னா கோபம் வரும். :)

marapuooviam

12.இது பழங்கால மரபு ஓவியம். A sage.
modernart

13.இது இக்காலத்திய மாடர்ன் ஆர்ட். ஒரு நடிகை. என்னே அழகு!.
portrait

14. இது நான் தான் 2 வருடங்களுக்கு முன் நியூ யார்க் செல்லும் போது ரோட்டு ஓரத்தில் போர்ட்ரைட் செய்த படம். ஸ்கான் பண்ணிப் போட்டிருக்கேன்.
sciencedevlopment

15.இது எங்கள் சமூகத்து விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் படம். எக்ஸ்-கேட்-007 மாடல். அதி நவீனமானது. இப்போது இதை பறக்க வைக்க முற்சி செய்து கொண்டுள்ளார்கள்.

toylion
16. இது அம்மா எனக்கு வங்கித் தந்த பார்பீ டால். பழசானதில் கொஞசம் டல் ஆயிட்டுது. என்ன? என்னுடைய படங்களில் நான் எப்படி இருக்கிறேன்.? அதி ஸ்மார்ட்தானே? :)

Posted at 12:22 am by karthikramas
Comments (7)  

Next Page