ஒவ்வொரு முகத்திலும்
ஒவ்வொரு கணத்திலும்
மகிழ்ச்சியே காண விழைகிறேன்..
உழைத்திடுவேன்...உண்மையாய்
அதை ஆக்கிடவும்...
மனிதர்கள் சதா கவலைகளில் மூழ்கிவிடுவது எனக்கு..எங்கோ ஏதோ செய்வது போல உறுத்தும்..
அது போன்ற் ஒரு கணத்தில் தோன்றியதுதான் இது.. இதன் சாத்தியமுடைமை ஒவ்வொருவரையும் பொறுத்தது..
என்னை பொறுத்தவரை இது மிக சாத்தியமான விஷயம்.
----
நமது தமிழ் சமுதாயத்தில், மறுமணம் இன்னும் பெரும்பாலும், ஒரு தூரத்து விஷயமாகவே உள்ளது,மிகவும் வேதனைக்குறிய விஷயம்.
எனது உறவினர்களில் ஒருவர் சமீபத்தில் கணவனை இழந்தார். நான் சென்றமுறை இந்தியா செல்வதற்கு சில நாட்களுக்கு முன் தான் இது நடந்தது. அந்த பெண்மணிக்கோ இன்னும் 30 வயதுக்கு மேல் ஆகியிருக்காது.நான் எனது தந்தையிடம் இது பற்றி பேசியது இதுதான். அந்த பெண்மணியை எங்காவது வேலைக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள் அப்பா, என்றேன். அது அவருக்கு கவலையை மறக்கவும், மனதுக்கு மாற்றமாகவும் இருக்கும் என்றேன்.அப்படியே கூடிய விரைவில் ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். அது ஒரு வருடமாகவோ அல்லது இன்னும் கொஞ்ஜம் நாள் கழித்தோ நடந்தால் சரியாக இருக்கும் என தோண்றுகிறது என்றேன். என் அப்பாவும் சரி என்று கேட்டு கொண்டார். இருந்தாலும் இதை பற்றி உடனே பேசமுடியாது உறவினர்களிடம் என்றார். அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தது எனக்கு.
இது நடந்து சரியாக 2 வருடங்கள் ஆகியிருக்கும். இன்னமும் அந்த பெண்மணிக்கு திருமணம் நடந்த பாடில்லை.மறுமணத்துக்கு தடையாக உள்ள விஷயங்களை நீக்க அரசு உதவமுன்வரவேண்டும்...கணவனை இழந்த பெண்களுக்கு மாற்று அடையாளம், மாற்று இடம், மாற்று வேலை அமைத்து தந்தால் அது அவரது மறுமணத்துக்கு ஏதுவாக இருக்கும். மறுமணத்தை ஆதரித்து தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை தரலாம். இது மெது மெதுவாக நமது கலாச்சாரத்தில் ஊறி , சில காலங்களில் மறு மண எண்ணிக்கைகள் அதிகரிக்க வழிவகுக்கும்..ஒவ்வொரு கணவனும், தனது இறப்புக்கு பின்னும் தனது மனைவி சந்தோசமாய் வாழவே ஆசைப்படுவான்...கணவனை இழந்த இளம்பெண்களுக்காவது கதவுகள் திறந்து வைக்கபடவேண்டும், அவர்களில் ஏற்று கொள்பவர்களுக்காகவாது..